மாதவன் ஒரு விஞ்ஞானி. அவருடைய கண்டுபிடிப்பை அங்கீகரிக்க 50 லட்சம் தேவைப்படுகிறது. அதை தயார் செய்த பிறகு ரூ. 5 கோடி கேட்கிறார்கள். நயன்தாராவிற்கு ஐவிஎஃப் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. சித்தார்த் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் தன்னுடைய டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார். அது தான் அவருடைய கடைசி போட்டி. அதன் பின்னர் அவர் ஓய்வு பெற வேண்டும். ஆனால், அதில் அவருக்கு விருப்பம் இல்லை. மாதவன் ரூ. 5 கோடியை தயார் செய்தாரா? நயன்தாராவின் மருத்துவத்திற்கு ரூ. 5 லட்சம் கிடைத்ததா? சித்தார்த் மீண்டும் தொடர்ந்து விளையாடுவாரா? என்பதே படத்தின் மீதி கதை.
மாதவன் மீண்டும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அநியாயத்திற்கு அழகாகவும், இளமையாகவும் இருக்கிறார். நயன்தாரா மீது பொஸ்ஸசிவே காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். நயன்தாரா சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாசிட்டிவாக பேசி அசத்தி இருக்கிறார். அறம், விசுவாசம் படங்களில் வித்தியாசமான பிளவுஸ் டிசைனில் தோன்றினார். அதே போல் இந்த படத்திலும் பிளவுஸ் டிசைன் அழகாக இருந்தது. சித்தார்த் கிரிக்கெட்டிற்காக குடும்பம் முதல் அனைத்தையும் இரண்டாம் பட்சமாக பார்க்கிறார். அம்மா இறப்பின் போது கூட போட்டியில் விளையாடுகிறார். மீரா ஜாஸ்மின் அமைதியாக வந்து போகிறார்.
கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து டெஸ்ட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ். சஷிகாந்த். சிறந்த கலைஞர்களை வைத்து இன்னும் சிறப்பாக இயக்கியிருக்கலாம். சக்ரவர்த்தி மற்றும் சஷிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். விராஜ் சிங் கோஹ்லி ஒளிப்பதிவு செய்ய சக்திஸ்ரீ கோபாலன் இசையமைத்திருக்கிறார்.
டெஸ்ட் – பெஸ்ட்டாக கொடுக்க கூட்டு முயற்சி எடுத்திருக்கிறார்கள்