‘சுமோ’ திரை விமர்சனம் 2.75/5

மிர்ச்சி சிவா சர்ஃபிங் விளையாட்டு பயிற்சியாளராக விடிவி கணேஷிடம் வேலை பார்க்கிறார். அதுபோக அவரின் ரெஸ்டாரண்டையும் கவனித்துக் கொள்கிறார். இதற்கு இடையே மெர்சி சிவா விற்கும் பிரியா ஆனந்திற்கும் காதல் மலர்கிறது. பிரியா ஆனந்தின் அப்பா நிழல்கள் ரவி தமிழ் ஆசிரியர். அவர் சிவாவை மாப்பிள்ளை ஆக ஏற்க மறுக்கிறார். இந்நிலையில் ஒரு முறை சர்ஃபிங் விளையாட்டின் போது டோஷினோரி தாஷிரோ கரை ஒதுங்குகிறார். அவரை சிவா காப்பாற்றுகிறார். ஆகையால், சிவாவை கடவுளாக பார்த்து அவர் விரல் கோர்த்து அவர் கூடவே இருக்கிறார். அவர் பழசை எல்லாம் மறந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் சிவாவிற்கு இவர் ஜப்பான் நாட்டின் சுமோ விளையாட்டு வீரர் என்பது தெரிய வருகிறது. ஆகையால், அவரை அவரின் நாட்டுக்கே சென்று விட்டு விடுவது என்று முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். இறுதியில், டோஷினோராவை ஜப்பானில் சிவா விட்டாரா? அவர் எதற்காக கரை ஒதுங்கினார்? நிழல்கள் ரவி சிவாவை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டாரா? என்பது படத்தின் நீதி கதை.

மிர்ச்சி சிவாவிற்கும் டோஷினோரோவிற்கும் இடையே ஒரு பிணைப்பை சொல்லத் தவறிவிட்டார் இயக்குனர். டோஷினோரோ ஏன் கரை ஒதுங்கினார்? அவரை திரும்ப ஜப்பானுக்கு கொண்டு போய் விட காரணம் என்ன? அங்கு எதற்காக அவர் ஜெயிக்க வேண்டும்? அவருக்கு திரும்ப சுய நினைவு வந்தது எப்படி? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை இல்லாமல் துண்டாக இருக்கிறது நிற்கிறது படம்.

சிவாவின் அலட்டிக் கொள்ளாத அவரின் தனித்தன்மையான நகைச்சுவையும் இப்படத்தில் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போனது ஏமாற்றமே.

இவ்ளோ பெரிய சுமோ வீரரை அழைத்து வந்து ஒரு படத்தில் சரியாக உபயோகிக்காமல் வீணடித்து விட்டார்கள்.

இத்தனைக்கும் மேல் ஒளிப்பதிவு மட்டுமே ஆறுதல்.

இந்த நிலையில் படம் எடுத்து நீண்ட காலமாக அப்படியே இருந்துள்ளது. குறைந்தபட்சம் இந்த இடைக்காலத்தில் பலமுறை பார்த்து சரி செய்ய வேண்டியது சரி செய்து இருக்கலாம் அதற்கான கால அவகாசத்தையும் தவறி விட்டார்கள்.

இப்படத்தை எஸ்பி ஹோசிமின் இயக்கியிருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

சுமோ – இன்னும் பயிற்சி தேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *