சச்சின் திரை விமர்சனம் (ரீ ரிலீஸ்)

ஊட்டியில் இருக்கும் கல்லூரியில் படிக்க வருகிறார் விஜய். காலேஜ் குயின் என்று அனைவரையும் தன்னழகால் கட்டி போட்டு இருக்கும் ஜெனிலியாவும் அதே காலேஜில் படிக்கிறார். ஆரம்பத்தில் விளையாட்டுக்காக ஜெனிலியாவை சீண்டும் விஜய் மீது தவறான எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறார்.

பெரிய கோடீஸ்வரனின் மகன் விஜய் தன்னை ரொம்ப சிம்பிளாகவே காட்டிக் கொள்கிறார். ஜெனிலியாவின் மீதான காதலை விளையாட்டாக வெளிப்படுத்துகிறார். ஜெனிலியா இதை புரிந்து கொண்டாரா அவரது காதலை ஏற்றுக் கொண்டாரா என்பதுதான் படத்தின் மீதி கதை.

20 வருடங்களுக்கு முன்பு சரியாக ஓடவில்லை. இருப்பினும் பின்னாளில் நன்றாக பேசப்பட்ட படம். இப்போது ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது.

விஜய் – வடிவேலு கூட்டணியில் உருவாகி வெளிவந்த இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம். ஊட்டி என்பதாலோ என்னவோ பல இடங்களிலெல்லாம் புகை இருந்து கொண்டே இருந்தது.

வழக்கம் போல் விஜய் அசத்தியிருக்கிறார். ஜெனிலியாவும் போட்டி போட்டிருக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அருமை.

சச்சின் – சிக்ஸர்