அஜித் குமார் நடிப்பில்,H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வருகின்ற 24ம் தேதி வெளியாகும் படம் ‘வலிமை’. இரவு 1 மணிக்கு சிறப்பு காட்சி இருக்கலாம் என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் சில திரையரங்குகளில் 4 மணி சிறப்பு காட்சிகான முன் பதிவு துவங்கி டிக்கெட்கள் அனைத்தும் விற்றும்போனது.
இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் பெரிய அளவில் ரசிகர்களை கொண்ட ஒரு திரையரங்கு திருநெல்வேலி ‘ராம் முத்துராம் சினிமாஸ் ’.
ராம் முத்துராம் சினிமாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வருகின்ற ஞாயிற்று கிழமை காலை 10 மணிக்கு வலிமை படத்தின் முன்பதிவு துவங்கவுள்ளது எனவும். இது முந்தைய சாதனைகளை முறியடிக்கும் நேரம் எனவும் பதிவிடப் பட்டது.
ரசிகர்கள் மத்தியில் அளவுகடந்த எதிர்பார்ப்பையும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் தற்போது ரிலீஸ்க்கு முன்னதாகவே 300+ கோடி ரூபாய் வியாபாரம் ஆனது என படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.