வரலாற்றில் முதல் முறையாக பேப்பர்லெஸ் பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் தகவல்
பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான அறிக்கை பிரிண்டிங் செய்யப்பட மாட்டாது என்றும், டிஜிட்டல் முறையில் பயன்படுத்த இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2021-22 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கின்றது. கொரோனா பாதிப்பால், பொருளாதார வீழ்ச்சி, மக்களின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்பு என நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், இந்த பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
இந்நிலையில், இந்த முறை தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பட்ஜெட் அறிக்கையானது அச்சிடப்படாமல் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.