மிராய் – திரை விமர்சனம் 3.5/5

அரசர்களுக்கு அரசராக திகழ்ந்தவர் அசோக மன்னர். இவர் பல்வேறு நாடுகளின் மீது படையெடுத்து வெற்றி பெற்று பெரும் வீரனாக இருந்து வந்தார். திடீரென்று ஒரு நாள் ஒரு அபூர்வ சக்தி அவருக்கு கிடைக்கிறது. அந்த சக்தியை பயன்படுத்தி ஒன்பது புத்தகங்களை தயார் செய்து அந்த சக்திகளை புத்தகங்களில் வைக்கிறார். பின்பு அந்த 9 புத்தகங்களையும் 9 வீரர்களிடம் ஒப்படைக்கிறார்.

காலங்கள் ஓட, தனது அம்மா ஸ்ரேயா தன்னை குழந்தையிலேயே விட்டு சென்றுவிட அனாதையாக வளர்கிறார் நாயகன் தேஜா சஜ்ஜா. மனோஜ் மஞ்சு 9 புத்தகங்களையும் அடைந்தால் நமக்கு அபூர்வ சக்தி கிடைத்துவிடும். அந்த சக்தியை வைத்து மக்களை கொன்று குவிக்கலாம் என்று ஒவ்வொரு புத்தகங்களாக சேகரித்து வருகிறார்.

இந்த விஷயத்தை இமயமலையிலிருந்து வரும் ஒரு பெண் தேஜாவிடம் கூறுகிறார். அதேபோல் மனோஜ் ஒன்பதாவது புத்தகத்தை அடைந்து விட்டால் அவரை யாராலும் அழிக்க முடியாது என்றும் கூறுகிறார்.

அதனைத் தடுத்து மனோஜ் மஞ்சுவை அழிப்பதற்காக மிரா என்ற ஆயுதத்தை தேடி செல்கிறார் தேஜா.

இறுதியில், மிராய் ஆயுதத்தை கண்டுபிடித்து மனோஜ் மஞ்சுவை அழித்தாரா? அல்லது மனோஜ் மஞ்சு ஒன்பதாவது புத்தகத்தை அடைந்தாரா? என்பதை படத்தின் மீதி கதை.

தேஜா தொடர்ந்து இறைவனை மையப்படுத்தி கதைகளில் மட்டுமே நடித்துக் கொண்டு வருகிறார். இப்படம் வட இந்தியாவில் அதிகமாக வழிபடக்கூடிய ராமரை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.

தென்னிந்திய மக்களிடையே முருகன், சிவன், விஷ்ணு, அம்மன் எப்படி பல கடவுள்கள் பிரத்தியேகமாக வணங்கப்பட்டு வரும் சூழலில் ராமரை ஏன் தென்னிந்தியாவிற்கு கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

இருப்பினும், இறைவனை மையப்படுத்தி வரும் படங்களின் வரிசையில் இந்தப் படமும் இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக அதிகமாக செலவழித்து பிரமாண்டமாக காட்டியிருக்கிறார்கள்.

மிராய் – கிராபிக்ஸ் பிரமாண்டம்