தியேட்டர் முன்பு கூட்டம் கூட தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

தியேட்டர் முன்பு கூட்டம் கூட தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. 6 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் அதன் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் பெரிதும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வருவதால் 100% இருக்கைகளை நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்குமாறு திரைத்துறையைச் சார்ந்த சங்கங்களும், நடிகர் விஜய்யும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பொங்கலுக்கு 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதேவேளையில் மத்திய அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால் தமிழக அரசு தன்னுடைய அறிவிப்பை வாபஸ் பெற்று 50% இருக்கைகளுக்கு அனுமதி என்ற பழைய நிலையே தொடரும் என்று அறிவித்தது.

இந்நிலையில், திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், மதுரையை சேர்ந்த போனிபஸ், வழக்கறிஞர் முத்துகுமார் ஆகியோர் தாக்கல் செய்த பொது நல மனுவில், “கொரோனா காலத்தில் தமிழக திரையரங்குகளில் சமூக இடைவெளியின்றி 100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமுறை மீறல். எனவே திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி கடந்த 4 ம் தேதி தமிழக வருவாய் மற்றும் பேரிடர் துறை சார்பில் வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் கூறி இருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், 100 சதவீத இருக்கை தொடர்பாக, தமிழக அரசு தனது அரசாணையை திரும்ப பெற்று கொண்டதற்கு பாராட்டுகள்.

சினிமா தியேட்டரில் 50 சதவீத இருக்கை விதி மீறல் நடைபெற கூடாது. எந்த சூழ்நிலையிலும் 100 சதவீத இருக்கைகளுட ன் திரையிட அனுமதிக்க கூடாது. காட்சிகளை அதிகப்படுத்தி கொள்ளலாம். சினிமா டிக்கெட் வாங்குவதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தனி மனித இடை வெளி, முக கவசம் அணியாமல் குவிந்து உள்ளனர். இது ஏற்புடையது அல்ல. திரையரங்குகள் முன் அதிகமான அளவு கூட்டம் கூட தடை விதிக்கப்படுகிறது. சமூக இடை வெளியை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். இதை அரசும் , திரையரங்க. உரிமையாளர்களும் உறுதிப்படுத்த. வேண்டும். ஒவ்வொரு காட்சி முடிந்த பிறகும் தியேட்டரில் கிருமி நாசனி தெளிப்பது உள்ளிட்ட விசயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதற்காக டிக்கெட் கட்டணத்தை தேவையான அளவு உயர்த்த தமிழக அரசுடன் கலந்து பேசி பரிசீலிக்கலாம். சமூக இடை வெளியை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். இதை அரசும், திரையரங்க. உரிமையாளர்களும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *