பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் விபரம், இன்று வெளியானது.
பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ், அரசு தேர்வுத் துறை அலுவலகத்தில், இன்று காலை, 10:30 மணிக்கு மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார்.
அதன்பின், காலை, 11:00 மணி முதல், தேர்வுத் துறை இணைய தளத்தில், ஒவ்வொரு மாணவரும் தங்களின் மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியலை, வரும் 22ம் தேதி பதிவிறக்கம் செய்யலாம்.
tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு.
+2 மாணவர்கள் 100% தேர்ச்சி
*தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்களுக்கான பிளஸ்-2 தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன.
*தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 16ஆயிரத்து 473.
*மாணவர்கள் பள்ளிகளில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு மார்க்குகள் எஸ்.எம்.எஸ்.ல் அனுப்பப்பட்டது.
*மதிப்பெண்களில் மாணவர்கள் திருப்திடையவில்லை என்றால் மீண்டும் தேர்வெழுதி கொள்ளலாம்.
*பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.