சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன்,கல்யாணி,பிரேம்ஜி அமரன்,S.J.சூரிய,S.A.சந்திரசேகர்,கருணாகரன், மனோஜ் பாரதிராஜா, டேனியல், Y.G.மகேந்திரன், அரவிந் ஆகாஷ்,ரவிகாந்த், அருண் மோகன், வாகை சந்திரசேகர் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான படம் “மாநாடு”.
நண்பனின் காதலை சேர்த்துவைப்பதற்காக துபாயில் இருந்து கோயம்பத்தூர் வரும் நாயகன் அப்துல் காலிக்காக சிலம்பரசன் , அங்கு நடக்கும் ஒரு மாநாட்டில் முதல்வரை கொன்று அதன் மூலம் மதக்கலவரம் நடக்க திட்டமிட்டிருப்பதை அறிந்து அதனை தடுக்க முயற்சிக்கிறார் அவரால் அவ்வளவு சுலபமாக அதனை தடுக்கமுடியாமல் போக அதே நாளுக்குள் மாட்டிக்கொள்கிறார்.நாயகன் எப்படி இந்த சம்பவத்தை தடுத்து நாள்சுழற்சியில் இருந்து தப்பிக்கிறார் என்பது படத்தின் மீதிக்கதை.
அப்துல் காலிக்காக சிலம்பரசன் தனது துறுதுறு நடிப்பாலும்,வேகத்தாலும் நம்மை அசர வைக்கிறார்,உண்மையிலேயே சிம்பு திரும்ப வந்துட்டாருப்பா என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்களுக்கு செம விருந்தாக இந்த படம் அமைந்திருக்கிறது.ஒரு பக்கம் சிம்பு பட்டையை கிளப்புகிறார்.
மறுபக்கம் S.J.சூர்யா தனது மிரட்டல் வில்லத்தனத்தினை முந்தைய படங்களான ஸ்பைடர்,மெர்சல், இறைவி(ஐ) விட ஒரு படி நடிப்பில் மேல சென்றுள்ளார். காட்சிக்கு காட்சி மாறுபட்ட நடிப்பு இவரின் பெரும் பலமாக அமைந்தது.
ஸ்டண்ட் சில்வா இதில் ஒரு கலக்கு கலக்கியுள்ளார், குறிப்பாக முதல் பாதியில் வரும் சண்டை காட்சியை ரசிக்கும் படியாகவும், கைதட்டல் வாங்கும் வண்ணம் உள்ளது, ஒரு சில காட்சிகளில் வந்தாலும் பார்வையாளர்களை ஈர்த்துள்ளார்.
கதையின் நாயகியாக வரும் கல்யாணி ப்ரியதர்ஷன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.எஸ் ஏ சந்திரசேகர்,ஒய் ஜி மகேந்திரன்,வாகை சந்திரசேகர் என சீனியர் நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பினை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கின்றனர்.பிரேம்ஜி,கருணாகரன்,அஞ்சனா கீர்த்தி,மனோஜ் பாரதிராஜா போன்றோர் அவ்வப்போது வந்து செல்கின்றனர்.
பிரவீன்.K.Lன் நூறாவது படம் இது, நூறாவது படம் என்பதை அவருடைய படத்தொகுப்பே பேசியது.
ரிச்சர்ட்.M.நாதன்-னின் ஒளிப்பதிவும் படத்தை வேறொரு தரத்திற்கு எடுத்துசென்றுள்ளது.
டைம்லூப் என்ற புதிய வித்தியாசமான கதைக்களத்தை கமர்ஷியலாக கொண்டுவந்து நமக்கு கொடுத்ததற்கு வெங்கட் பிரபுவிற்கு வாழ்த்துக்கள்.தமிழிலும் இப்படி ஒரு படம் எடுக்கமுடியும் என்று காட்டியதற்கு பெரிய அப்லாஸ்.சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் நம்மை திசை திருப்புகிறார் வெங்கட் பிரபு.
படத்தினை மற்றுமொரு லெவெலுக்கு எடுத்து செலுத்து யுவன் ஷங்கர் ராஜாவின் இசை.படத்தில் பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும் பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் யுவன்.
மாநாடு – ரசிகர்களின் எதிர் பார்ப்பை ரிபீட்(ல்) வைத்தது.