நீலம் புரொடக்ஷன்ஸ் பா.ரஞ்சித் தயாரிப்பில், யாழி பிலிம்ஸ் இனைந்து வழங்கும் படம் ‘குதிரைவால்’. இந்த படத்தில் கலையரசன், அஞ்சலி பாட்டில் நடிக்க, பிரதீப் குமார் இசையமைத்திருக்கிறார். மனோஜ் லியோனல் ஜேசன் இயக்கியிருக்கிறார்.
கதைப்படி,
கதைநாயகன் சரவணன் (கலையரசன்) தூக்கத்தில் கனவு காண்கிறார் காலை எழுந்து பார்த்ததும் அவருக்கு குதிரைவால் முளைத்திருக்கிறது.
அவர் ஏதும் புரியாமல் ஒரு பதட்டத்துடன் சுற்றித்திரிக்கிறார்.
வால் மற்ற யாருக்கும் தெரியவில்லை என நினைத்து சிறிது சாந்தம் அடைகிறார்.
அவர் வங்கியில் வேலைபார்கிறார், வேலை நேரத்தில் வீட்டிற்கு வந்து மதுஅருந்திவிட்டு மீண்டும் வேலைக்கு சென்று பந்தை வைத்து விளையாடி வேலையை இழக்கிறார்..
வீட்டுல் ஒரு இன்சூரன்ஸ் பாலிசி கையொப்பம் இடும் போது பேரை மாற்றிக்கூறுகிறார்.
பெயரை மாற்றியது மட்டுமல்லாமல் அரசியல் பேசுகிறார்.
நாய் வளர்க்கும் ஒருவருடன் மது அருந்திவிட்டு நிலவை பார்த்து வியப்படைந்தார், மீண்டும் கனவு உலகத்தில் வால் இல்லாத குதிரையை பார்க்கிறார்.
சிறுவன் சிறுமி என இருவர் ஒரு கிராமத்தில் சுற்றி திரிகின்றனர்.
அந்த சிறுவானின் அக்கா கர்பமாகிறார், கரு கலைகிறது, இறக்கிறார்.
அச்சிறுவனின் தோழி இறக்கிறார்.
சிறுவனின் தந்தை ஒரு பெண் மீது கல் எறிகிறார் அவர் மாயமாக மறைகிறார்.
இறுதியில் சரவணன் ஒருவரை கொலை செய்ததாக ஒரு டிடெக்ட்டிவ் கூறுகிறார் படம் முடிகிறது.
என்னங்க எதுமே புரியலையா? இல்ல குழப்பமா இருக்கா? படம் பார்த்தா எல்லாருக்கும் இப்படி தான் இருக்கும். அதனால பாக்கலாமா? வேணாமா? இதை நீங்க தான் முடிவு செய்யவேண்டும்.
இந்த படத்துல பிளஸ்னு சொன்னா அது கலையரசன் அவர்களின் நடிப்பு. எதார்த்தமாக அழகாக அந்த ஒரு குழப்பமான கதாபாத்திரத்தின் குழப்பத்தை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அடுத்ததாக இசை, இப்படி பட்ட குழப்பமான தெளிவில்லாத கதைக்கு இசையமைப்பது சவால். அந்த சவாலை அழகாக கையாண்டிருக்கிறார்.
கூடுதல் பலம் இந்தப்படத்தி கலை தான், காட்சிக்கு காட்சி வித்யாசம், அவர்கள் இந்த படத்திற்காக போட்ட உழைப்பு ஏராளம், ஆனால் இந்த கதை கலையை முழுமையாக ரசிக்க விடவில்லை.
ஹீரோயின் அஞ்சலி பாட்டில் அவர்களுக்கு பெரியதாக வேலையில்லை, ஆனால் வந்த காட்சிகளில் அவரின் நடிப்பு ஓகே.
மனோஜ் லியோனல் ஜேசன் எதற்காக இந்த படத்தை இயக்கியுள்ளர் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். மேற்படி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
குதிரைவால் – புரியாத புதிர்