நான் சினிமாவை நம்புகிறேன் சினிமாவை தான் காதலிக்கிறேன் – நடிகர் கிச்சா சுதீப்

Zee studios வழங்க, Shalini Artss சார்பில்  ஜாக் மஞ்சுநாத் தயாரிப்பில், Invenio Origins சார்பில்  அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பு செய்துள்ள திரைப்படம் விக்ராந்த் ரோணா. இயக்குநர் அனுப் பண்டாரி இப்படத்தை இயக்கத்தில். பாட்ஷா கிச்சா சுதீப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி மற்றும் நீதா அசோக் நடித்துள்ள “விக்ராந்த் ரோணா” படம்  பான் வேர்ல்ட்   3-D  ஃபேண்டஸி  திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் 2022 ஜுலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி  மற்றும் ஆங்கிலம்  மொழிகளில்  திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது

இந்நிகழ்வினில் விருந்தினராக நடிகர் ஷாம் மற்றும் தயாரிப்பாளர் TG தியாகராஜன் கலந்துகொண்டனர்

இவ்விழாவினில்
நடிகர் ஷாம் பேசியது..,
இன்று இந்த நிகழ்வுக்கு நான் வர காரணம் கிச்சா சுதீப் அண்ணன் தான். அவரும், நானும் நெருங்கிய தோழர்கள், அண்ணன்- தம்பி போல பழகுவோம். அவரின் முழு கவனமும் எப்பொழுதும் திரைப்படத்தில் தான் இருக்கும். ஒரு திரைப்படத்தை எப்படி சிறப்பாக மெருகேற்ற வேண்டும் என்று யோசித்து, அதற்காகவே உழைப்பார். அப்படி ஒரு நாள் நான் அவரை பார்க்க போன போது, அவர்  எனக்கு விக்ராந்த் ரோணாவுடைய 20 நிமிட காட்சிகளை போட்டுக்காட்டினார். நான் அதை பார்த்து மிரண்டுவிட்டேன். படத்தின் மேக்கிங் அவ்வளவு பிரமாதமாக இருந்தது. பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இந்த படம் இருக்கும். விக்ராந்த் ரோணா அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

தயாரிப்பாளர் தியாகராஜன் கூறியதாவது..,
நடிகர் கிச்சா சுதீப் உடைய ‘நான் ஈ’ திரைப்படத்தின் பெரிய ரசிகன் நான், அதில் அவருடைய நடிப்பு அபாரமாக இருந்தது. எதிரில் ஆள் இல்லாமல், ஒரு ஈ இருப்பது போல் நடிப்பது சாதாரண காரியம் அல்ல. அதேபோல் பயில்வான் திரைப்படத்திற்காக கடினமான உழைப்பை கொடுத்திருந்தார் சுதீப். இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் கிச்சா சுதீப். விக்ராந்த் ரோணா உடைய காட்சிகளை பார்க்கும் போது, படத்தின் மேக்கிங் என்னை பிரம்மிப்படைய வைத்தது. இசை பிரமாதமாக உள்ளது. நிச்சயமாக இந்த படம் பெரிய வெற்றியடையும். அதற்குண்டான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கிறது. படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் பேசியது…
இது எங்களோட மூணாவது படம். ஜாக் மஞ்சு நாத் என்னுடைய நெருங்கிய நண்பர். கோவிட் நேரத்தில் தான் இந்தப்படத்தில் நான் இணைந்தேன். கோவிட் நேரத்தில் ஷீட் இருக்குமா எனக்கேட்டேன் ஆனால் அப்போதே  உரிய பாதுகாப்புடன் அவர்கள் பிரமாண்டமாக அதை உருவாக்கி கொண்டிருந்தார்கள். நானும் இப்படத்தில் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டு இணைந்தேன். இந்தப்படம் சூப்பராக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

நடிகர் கிச்சா சுதீப் பேசியது…
நான் சினிமாவை நம்புகிறேன் சினிமாவை தான் காதலிக்கிறேன். அது தான் எங்களை இங்கு வரை அழைத்து வந்துள்ளது. இது ஒரு நல்ல படைப்பு,  இந்தப்படத்தில் நானும் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. தமிழில் நல்ல வாய்ப்புகள் வரும்போது அழைக்கும்போது நடிப்பேன். கர்நாடகா சினிமாவை கடவுளாக கொண்டாடும் இடம், கேஜிஎஃப் மூலம் அது எல்லா இடத்திலும் தெரிவது மகிழ்ச்சி. இந்தப்படம் உங்கள் அனைவரையும் புது உலகிற்கு கூட்டிச்செல்லும் எல்லோருக்கும் நன்றி.

இப்படம் 2022 ஜுலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி  மற்றும் ஆங்கிலம்  மொழிகளில்  திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *