கதை என்ன?
ஆன் லைன் வர்த்தகத்தை மையப்படுத்தி அதில் திருட்டு தொழில் செய்யும் இன்ஜினியர்களின் இன்ப கதை இது.
துல்கர் சல்மான் & ரக்ஷன் இருவரும் நண்பர்கள். திருடுவது அதை தண்ணியாக செலவழிப்பது.. பின்னர் திருடுவது இதுதான் இவர்களின் வாழ்க்கை.
அதாவது App Developer & Animator என்று சொல்லிக் கொண்டு ஆன்லைன் திருட்டில் தன் வாழ்க்கையை ஓட்டும் இளைஞர்கள்.
ஒரு ரூபாய்காக சூப்பர் மார்கெட்டில் சண்டை போடும் நேர்மையான ரிது வர்மாவை சந்திக்கிறார் ஹீரோ துல்கர் சல்மான்.
உடனே காதலும் கொள்கிறார். அதுபோல் ரிதுவின் தோழி நிரஞ்சனியை ரக்சன் காதலிக்கிறார்.
பெரும் தொகையை அடித்துவிட்டு கோவாவில் தங்கள் காதலியுடன் செட்டிலாக திட்டமிடுகின்றனர்.
அதற்குள் இவர்களை தேடி போலீஸ் கௌதம் மேனன் வருகிறார். அதன்பின்னர் நாம் யாருமே யூகிக்க முடியாத ட்விஸ்ட்டுகளை வைத்து கதையை செம ஸ்மார்ட்டாக நகர்த்தியிருக்கிறார் டைரக்டர் தேசிங்கு பெரியசாமி.
அதன்பின்னர் என்ன ஆனது? திருடர்கள் எப்படி தப்பித்தார்கள்? காதல் கை கூடியதா? போலீஸ் என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.
நடிச்சவங்க எப்படி?
ரிது வர்மா ரிச் லுக் என்றால் துல்கர் சல்மான் துறுதுறு லுக். இருவருக்கும் லவ் கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகியிருக்கு எனலாம்.
அதுபோல் துல்கருக்கும் ரக்ஷனுக்கும் உள்ள ப்ரெண்ட் ஷிப் கெமிஸ்டர் வேற லெவல். எனக்கு கால் பண்னு மச்சி என ரக்சன் கூறும்போது எல்லாம் தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்.
இவர் கொடுக்கும் டைமிங் ஒன் லைன் காமெடி நன்றாக ஸ்கோர் செய்கிறது.
துல்கர் போடும் ஆன்லைன் ஆப்புகள் பலருக்கும் வயிற்றில் புளையை கரைக்கும். ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போதும் இனி எச்சரிக்கை தேவை.
பணக்கார ஆண்களுக்கு அதிலும் பெண்களை கீழ்த்தரமாக எடை போடும் ஜென்மங்களுக்கு ரிது வர்மா வைக்கும் செக் பாய்ண்ட் சூப்பர்.
ஒரு பெண்ணை நேர்மையாக இருக்க விட மாட்டாங்க. அட்ஜஸ்ட் பண்ணிக்க கூப்டுறாங்க.. இப்படிதானடா நீங்க எல்லாம்.. என ரிது பேசும்போது பெண்களே கைதட்டி ரசிப்பார்கள்.
பொண்டாட்டி இருந்தாலும் இவிங்க வேற ஒருத்தியை தேடுவாங்க.. அத வச்சி தான் இப்படி பண்றேன் என ரிது வர்மா பேசும்போது அப்ளாஸ்.
தோழியாக நிரஞ்சனி.. எப்போதும் அமைதியாகவே இருந்து இவர் செய்யும் சாகசங்கள் செம. புல்லட் ஓட்டுவது முதல் ஆட்டைய போடுவது முதல் ரசிக்க வைக்கிறார்.
போலீசாக கௌதம் மேனன்.. ஸ்டைலிஷ் லுக்கில் இவர் கெத்து. இவரது ப்ளாஷ்பேக் செம ட்விஸ்டு..
டெக்னீசியன்கள்..
மசாலா காஃபி & ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இவர்களது பின்னணி இசை வேற லெவல்.. ரீரிக்கார்ட்டிங் அருமையோ அருமை.
எனை விட்டு எங்கும் போகாத… என்றும் போகாத பாடல் அழகான மெலோடி…
கே எம் பாஸ்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்புல்.
ஏடிஎம் முதல் ஆன்லைன் வரை எப்படி எல்லாம் திருட்டு நடைபெறுகிறது என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.
காஸ்ட்லி காரை அன்லாக் செய்துவிட்டு அதை ஓட்டுவது.. கை ரேகைக்கு டூப்ளிக்கேட் ஸ்டிக்கர் போடுவது… சிசிடிவி கேமராவுக்கே Infra red light அடிப்பது.. என புதுப்புது ஆச்சரியங்களை காட்டியிருக்கிறார்.
இடைவேளைதான் செம ட்விஸ்ட் என்று பார்த்தால் க்ளைமாக்சில் வச்சாரு பாருங்க ட்விஸ்ட்.. அது எல்லாம் வேற லெவல்.
எந்த இடத்திலும் போரடிக்காமல் சீட் நுனியில் நம்மை அமரவைத்துள்ளார். ஜாலியாக கருத்தை சொல்லி நமக்கு ஆன்லைன் ஆபத்தையும் உணர்த்தியிருக்கிறார்.
நிறைய இடங்களில் ரஜினி டச் இருக்கிறது. அதற்கு காரணம் ரஜினியின் தீவிர ரசிகர் டைரக்டர் தேசிங்கு பெரிய சாமி.
டைட்டில் கார்ட்டில் கூட ரஜினி பேரை போட்டுதான் ஆரம்பிக்கிறார்.
ஆக மொத்தம்… நிச்சயம் குடும்பத்துடன் ரசிக்க ஒரு கலர்புல் படம் தான் இது.
ஹை டெக் ஆசை.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
Kannum Kannum Kollaiyadithaal Movie Review