சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இது ரஜினியின் 168 படம் என்பதால் இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 168 என தலைப்பு வைத்துள்ளனர்.
ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு, மீனா நடிக்கின்றனர்.
மேலும் முக்கிய வேடத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
டி.இமான் இசையமைக்க இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் முழுக்க முழுக்க கிராமத்து கெட் அப்பில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் அண்ணாத்த என்பதுதான் படத்தலைப்பு என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளனர்.
இத்துடன் மோசன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
Its Official now Thalaivar 168 titled Annaatthe