நடிகர்கள் :
ராஜேஷ் பாலச்சந்திரன் as குமார்
அம்ருதா ஸ்ரீநிவாசன் as இயல்
விக்னேஷ் சண்முகம் as பிரசாந்த்
கிரிஜா ஹரி as ஜெனிபர்
ஸ்ரீ ராஜ் as மிதுன்
சுபதி ராஜ் as ராமசாமி
ஒளிப்பதிவு : பிரவின் பாலு
இசை : ஜோன்ஸ் ரூபர்ட்
படத்தொகுப்பு : ராம் பாண்டியன்
ஒலி வடிவமைப்பு : ராஜேஷ் சசீந்திரன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் : சுமேஷ்
கலை : ஜெய் J திலிப்
ஒப்பனை : திவ்யா M
நிர்வாக தயாரிப்பு : மனோ வெ கண்ணதாசன்
விமர்சனம் :
சிறு வயதில் அப்பா அம்மா இன்றி ஆசிரமத்தில் வளர்கிறாள் இயல். பின்பு கல்லூரி படிப்பின் பொழுதே புத்தகம் எழுத துவங்குகிறாள், வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும், அவளின் அனுபவங்களையும் கதையாக எழுதும் ஒரு எதார்த்த எழுத்தாளர்.
முதற்க் காட்சியில் கதாநாயகி கொலை செய்யப்படுகிறாள் அது முதலே படத்தின் கதை சூடு பிடிக்கிறது. அவளை கொலை செய்தவன் சில காட்சிகளிலேயே கிடைத்தாலும், அவன் வெறும் கருவி மட்டுமே, கதாநாயகியை கொலை செய்ய சொன்னது யார்? அதற்கான காரணம் என்ன? என்பது மீதி கதை.
முதல் பாதியில் நிறைய கேள்விகளுடன் சுவாரசியமாக இருக்கும், இரண்டாம் பாதியில் அத்தனை கேள்விகளுக்கும் ஒரு காட்சியில் பதிலாய் கொடுத்தது படத்தின் வெற்றி.
எந்த ஒரு காட்சியும் சோர்வாக இருக்காது, சொல்ல வந்த கதையை கச்சிதமாகவும் இரத்தின சுருக்கமாகவும் சொன்னது படத்தின் பலம்.
மனோ வே கண்ணதாசன் இயக்கம் முதல் படம் போல் இல்லை. காட்சியின் நுணுக்கங்களை அழகாக வடிவமைத்துள்ளார், படத்திற்கும் அணைத்து கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் பிரவின் பாலு தனக்கான வேலையை ரசிக்கும் வகையில் இருக்கிறது.
ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் படத்தை ஒரு தரத்தில் நிறுத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பில் ராம் பாண்டியன் எது தேவையோ அதை மட்டும் பயன் படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
இறுதி பக்கம் – படக்குழுவின் துவக்கம்