தர்ஷன், காளி வெங்கட், வினோதினி மற்றும் பலர் நடிப்பில், SK புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராஜவேல் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் “ஹவுஸ் மேட்ஸ்”.
கதைப்படி,
சொந்த வீடு இல்லாதவன் என் பொண்ணை காதலிக்கலாமா? என ஹீரோயினின் அப்பா கேள்வி கேட்க, ஒரு செகண்ட் ஹேண்ட் ஃபிளாட்டை கஷ்டப்பட்டு வாங்கும் ஹீரோ தர்ஷன் தனது காதலியை திருமணம் செய்துக் கொள்கிறார். சொந்த வீட்டுக்கு அவர்கள் செல்ல, அங்கே ஆனந்தபுரத்து வீடு படத்தில் வருவது போல ஏகப்பட்ட அமானுஷ்ய ஆக்டிவிட்டிகள் அரங்கேறுகின்றன. இவர்களுக்கு நடப்பதை போலவே காளி வெங்கட், வினோதினி தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் குடியேறி இருக்கும் ஃபிளாட்டிலும் “ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா” என ஹாரர் ஆட்டம் களைகட்ட, இதற்கு இடையே சயின்ஸ் ஃபிக்ஷனை எப்படி இயக்குநர் சாமார்த்தியமாக பிளேஸ் செய்து புதுப்படத்தை பார்த்த உணர்வை கொடுக்கிறார் என்பது தான் கதையே.
ஆரம்பத்தில் என்னடா வழக்கமான பேய் படத்தில் வந்து மாட்டிக்கிட்டோமோ என்கிற உணர்வை கொடுத்தாலும், அது பேய் அல்ல என்கிற இடத்தில் இருந்து படம் பிக்கப் ஆகிறது. புதிதாக இந்த படத்தில் எந்த ஜானரை இயக்குநர் தொட்டிருக்கிறார். மாநாடு படத்தில் டைம் லூப் கான்செப்ட் போல இங்கே இயக்குநர் சொல்லியிருக்கும் புது கான்செப்ட் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளவும், படத்தை அனைத்து ரசிகர்களுக்கும் புரியும் படி எடுத்துச் சொன்ன விதமும் அருமை.
அதிகமாக சிஜிக்கெல்லாம் செலவு செய்யாமல், விஷுவல் டெக்னிக்ஸ் மூலம் அந்த ஹாரர் காட்சிகளை படமாக்கிய விதம். கதை மற்றும் திரைக்கதையை எழுதி அதை திரையில் கொண்டு வர இயக்குநர் போட்ட பெரும் முயற்சி படத்துக்கு பெரிய பிளஸ் ஆக தெரிகிறது. காளி வெங்கட்டின் நடிப்பு, கிளைமேக்ஸில் கனெக்ட்டான எமோஷன் காட்சிகள் என அனைத்துமே அருமை தான்.
தர்ஷனின் பர்ஃபார்மன்ஸ் இன்னமும் பெட்டராக இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் ஆரம்பத்தில் சில இடங்களில் தெரிவது மைனஸ் ஆக தெரிகிறது. சில ரிப்பீட்டட் காமெடி காட்சிகளையும் குறைத்திருந்தால், இந்த ஹவுஸ்மேட்ஸ் இன்னமும் சூப்பராக இருந்திருக்கும்.