ரெட் டிராகன் என்று உலகத்தில் உள்ள அனைத்து கேங்ஸ்டர் குழுவிலும் அறியப்படுகிறார் அஜித். தன் மனைவி திரிஷா குழந்தையை தொட வேண்டும் என்றால் கேங்ஸ்டரை விட்டுவிட்டு இப்போது மனிதனாக நல்ல மனிதனாக மாறி வர வேண்டும் என்று கட்டளை இடுகிறார். திரிஷாவின் வேண்டுகோளுக்கிணங்க தன் மகனின் நல் வாழ்க்கைக்காகவும் 17 ஆண்டுகள் சிறைவாசம் இருந்து திரும்புகிறார். இவரை சந்தோஷமாக வரவேற்க த்ரிஷா கிளம்புகிறார். அஜித், திரிஷா மகனான கார்த்திக் தேவ் தன்னுடைய அப்பா மிகப்பெரிய தொழில் அதிபர் என்று நினைத்துக் கொண்டு அப்பாவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், எதிர்பாராத விதமாக போதி மருந்து உட்கொண்ட குற்றத்திற்காக கார்த்திக் தேவை காவல்துறை கைது செய்கிறது. தன் மகனுக்காக விட்டு அந்த கேங்ஸ்டரை தன் மகனுக்காகவே கேங்ஸ்டர் ஆக மீண்டும் உருவாகிறாரா? போலியாக குற்றம் சாட்டப்பட்ட தன் மகனை வேறு வழியில் மீட்க்கிறாரா? திரிஷா இறுதியில் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
வழக்கம்போல சென்டிமென்ட் காட்சிகளில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அஜித். திரிஷா வழக்கமான மனைவி கணவரிடம் எப்படி நடந்து கொள்வாரோ? அப்படி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கார்த்திக் பல படங்களிலும் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக குறிப்பிட்டு சொல்லும் படியாக பேர் வாங்கி வருகிறார். வாழ்த்துகள். முதல் படத்திலிருந்து தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிய அர்ஜுன் தாஸ் எதிலும் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். சிம்ரன் சிறப்பு தோற்றத்தில் வந்து சிறப்பாக செய்திருக்கிறார்.
இவர்களுடன் பிரபு, பிரசன்னா, சுனில், ஜாகி ஷரஃப், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஷைன் டாம் சாக்கோ, தின்னு ஆனந்த், பி எஸ் அவினாஷ், டார்க்கி நாகராஜா, பிரியா பிரகாஷ் வாரியர், சாயாஜி ஷிண்டே, ரகுராம், உஷா உதூப், ராகுல் தேவ், பிரதீப் கப்ரா, ஹாரி ஜோஷ், அஜித் நம்பியார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வந்து சிறப்பு செய்திருக்கிறார்கள்.
கேமியோ தோற்றங்கள் :
மா டோங்-சியோக் (அனிமேஷன் தோற்றம்)
கீனு ரீவ்ஸ் (அனிமேஷன் தோற்றம்)
அல்வரோ மோர்டே (பணம் கொள்ளை) (அனிமேஷன் தோற்றம்)
இயக்குனர் ஆதிக்கிரவிச்சந்திரன் அஜித் ரசிகராக படம் இயக்கி இருக்கிறார். ஆகையால், ரசிகர்கள் மட்டுமே கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து காட்சிகளுக்கும் பில்டப் கொடுத்து இருக்கிறார்.
காட்சிக்கு காட்சி மாஸாக எடுத்து இருக்கிறார். படம் முழுக்க சண்டை காட்சிகளும், துப்பாக்கி குண்டு சப்தமுமாகவே இருக்கிறது. கதை பழத்தையும் திரை கதையையும் இன்னும் சிறிது சிறப்பாக செய்திருக்கலாம். மிகப்பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்கும்போது இன்னும் கொஞ்சம் பொறுப்பு தேவை. அதுமட்டுமல்லாமல் வசனங்களும் காட்சிக்கு இடையில் வரும் பாடல்களும் அனைத்தையும் பழைய படங்களில் இருந்து எடுத்து பின்னனியில் சேர்த்து இருக்கிறார். சில இடங்களில் அது ரசிக்கும் படியாக இல்லை. சினிமா துறையில் இசையமைப்பாளருக்கும் பஞ்சமில்லை, பாடல் ஆசிரியர்கள், கவிஞர்களுக்கும் பஞ்சமில்லை. புதிதாகவே பாடல்களை இயற்றி இசையமைத்திருக்கலாம்.
ஜிவி பிரகாஷ் படத்திற்கு ஏற்றவாறு இசையமைத்திருக்கிறார். அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும், விஜய் வேலு குட்டியின் படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் டீ – சீரிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கிறது.
குட் பேட் அக்லி – சில இடங்களில் மட்டுமே குட்டாக இருக்கிறது.
– ஹேமலதா வாசுதேவன்