காவல்துறைக்கு சவாலாக ஒரே பாணியில் அடுத்தடுத்து ஆறு கொலைகள் நடக்கிறது. நவீன் சந்திரா அசிஸ்டன்ட் கமிஷனர் ஆக இருக்கிறார் அவரிடம் இந்த கொலைகளை பற்றி கொலைகாரனை பற்றியும் கண்டுபிடிப்பதற்கான அதிகாரம் வருகிறது. முதலில் கொலம்பிய நவீன் பிறகு இது எப்படி நடக்கிறது இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று துருவி துருவி விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் ரித்விகாவை கொலை வழக்கு சம்பந்தமாக சந்திக்க நேர்கிறது. அப்போது அவருடைய உடன் பிறந்த சகோதரி கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் விசாரணையில் தெரிகிறது. அங்கு அவருக்கு ஒரு குழு கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு அவர் அந்த கொலைகள் எப்படி நடந்தது? அதற்கான காரணம் என்ன? அந்த கொலைகளை யார் செய்தது என்பதே கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதி கதை.
நவீன் சந்திரா படம் முழுக்க சீரியஸ் ஆகவே வருகிறார். இவரே பார்த்து முதல் பார்வையிலேயே இவர் மீது காதல் வயப்படுகிறார் ரியா ஹரி. அவர் அசிஸ்டன்ட் கமிஷனர் என்று தெரிந்ததும் இன்னும் பிடித்துப் போகிறது. ரியாவின் காதலை ஏற்க மறுக்கிறார் நவீன். ஆனாலும் விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் ரியா. அபிராமி ஒவ்வொரு காட்சியிலும் நம்மை உணர்ச்சிவசத்தில் அழுத்தி நெகிழ வைக்கிறார். பார்வையாளர்களே தன்னுடைய கதாபாத்திரமாகவே மாற்றி அவருடைய உணர்வுகளை பார்வையாளர்களுக்கு தன் நடிப்பின் மூலம் சுலபமாக கடத்திச் சென்று இருக்கிறார். இந்த படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தனது கதாபாத்திரங்களை மிக அழகாக செய்து இருக்கிறார்கள்.
லோகேஷ் ஏஜில்ஸ் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். வித்தியாசமான சஸ்பென்ஸ் திரைக்கதை எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் பிளாஷ்பேக் காட்சிகளை மிகவும் சுவாரசியமாக எழுதி இருக்கிறார் இயக்குனர். அது மட்டுமல்ல அனைவரிடமும் ஒளிந்திருக்கும் நடிப்பு திறனை மிக அழகாக செதுக்கி வெளியில் கொண்டு வந்திருக்கிறார். தன்னுடைய வேலையை நேர்த்தியாக செய்திருக்கிற இயக்குனர் லோகேஷ் ஏஜில்ஸ். டி.
இமானின் இசை படத்திற்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்திருக்கிறார்கள்.
எதிர்பாராத சுவாரசியமான பல திருப்பங்கள் நிறைந்திருக்கும் படம் தான் லெவன்.
லெவன் – எதிர்பாரா திருப்பங்கள்