தாவூத் – பக்கா மாஸ் – திரை விமர்சனம் 4/5

லிங்கா கடனுக்கு ஒரு கார் வாங்குகிறார். அதனை கேப் (வாடகை கார்)ஆக பயன்படுத்திக் கொண்டு தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அப்பாவியான லிங்கா தனது வேலை என்னவோ அதை மட்டும் செய்து கொண்டு யார் வம்பிற்கும் போகாமல் அமைதியாக வாழ்கிறார். இவருடைய நண்பராக ஸாரா நடித்திருக்கிறார்.
ஒரு ஏரியாவிற்குள் போதை பொருள் கடத்தல் மன்னனாக திகழ்கிறார் சாய் தீனா. இந்தியாவில் மிகப்பெரும் டான் தாவுத். அவரின் சரக்கை காலதாமதமாக கைமாற்றியதால், சாய்தீனாவிடம் போதை பொருள் கடத்தும் வேலையானது மற்றொரு கடத்தல் மன்னனான அபிஷேக்கிடம் கொடுக்கப்படுகிறது.
இவ்வளவு பெரிய பொறுப்பை தன்னை நம்பி தாவுத் வழங்கியிருப்பதால், இந்த முதல் கடத்தல் வேலையை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார் அபிஷேக்.
 ஆனால், சாய் தீனாவோ இந்த வேலையை கெடுக்க வேண்டும் என்று முனைப்பில் போலீஸ் உயரதிகாரி ஒருவர், போதை பொருள் கடத்தல் பிரிவு, தாவுத்தின் எதிரி என பலரும் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், இந்த கடத்தல் விவகாரத்தில் லிங்கா எப்படி உள்ளே வந்தார்? அவருக்கும் இந்த கடத்தல் கும்பலுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? யார் இந்த தாவுத்? போன்ற கேள்விகளுக்கு விடை தான் படத்தின் மீதிக் கதை.
நாயகன் லிங்கா, படத்தின் இந்த கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அப்பாவியான கதாபாத்திரத்தில் பால் வடியும் முகமாக பாவனையில் காட்டியிருக்கிறார். இப்படி இருந்தவர் இரண்டாம் பாதியில் தன்னை முழுவதுமாக மாற்றும் இடத்தில் சபாஷ் சொல்ல வைக்கிறார் லிங்கா. அதிலும் கடற்கரை ஓரத்தில் நிற்கும் காட்சி வேற லெவல் மாஸ் தான்.
ரவுடிகளாக நடித்த சாய் தீனா, அபிஷேக், சரத்ரவி உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்திருந்தனர். ஆனால், புகைப் பிடிக்கும் காட்சிகளை சிறிது குறைத்திருக்கலாம்.
மாஸ் காட்டும் காட்சிகள் மிகச் சரியாக அனைவருக்கும் பொருந்தியிருக்கிறது. படத்தின் கதாநாயகியான சாரா ஆச்சர் அழகாக வந்து செல்கிறார். ஒரு சில காட்சிகள் மட்டுமே சாரா வந்து சென்றது படம் பார்க்கும் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துவிட்டார் இயக்குனர்.
சீனியர் நடிகரான ராதாரவி, வையாபுரி மற்றும் ஸாரா உள்ளிட்டவர்களும் தங்கள் பாத்திரங்களை அளவாக செய்து முடித்திருக்கின்றனர்.
உச்ச நடிகர்கள் நடிக்க வேண்டிய கனமான கதையை தனக்கேற்ற கலைஞர்களைக் கொண்டு மிகவும் மாஸான ஒரு படத்தைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் ராமன், பாராட்டுகள்.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப் பெரிய பக்க பலமாக இருக்கிறது.
மாஸ் காட்சிகளுக்கான பின்னணி இசையை மிரட்டலாக கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் படத்தினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது. எதிர்பாரா திருப்பம், அனல் பறக்கும் மாஸ் காட்சிகள் என படத்தினை நன்றாகவே கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
இரத்தம் தெறிக்க ஒரு மாஸ் கேங்க்ஸ்டர் படம் என்றால் அது தாவூத் தான்.
இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று கேட்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்: பிரசாந்த் ராமன்

தயாரிப்பு – TURM புரொடக்ஷன் ஹவுஸ் S. உமா மகேஸ்வரி
ஒளிப்பதிவு – சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த்.
இசை – ராக்கேஷ் அம்பிகாபதி
எடிட்டிங் – R. K. ஸ்ரீநாத்
நடிகர், நடிகைகள் : லிங்கா, சாரா ஆச்சர், திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன்
தாவூத் – பக்கா மாஸ்