கொரோனா : இந்தியாவின் முதல் தடுப்பு மருந்து – மனிதர்களிடம் சோதனை நடத்த அனுமதி*
*ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்கிற தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.*
*இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இந்திய வைராலஜி கழகம் ஆகியவற்றோடு இணைந்து இந்த தடுப்பு மருந்தை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.*
*இந்நிலையில் அந்த நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அந்த மருந்தை மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்ய அனுமதி அளித்துள்ளது.*
*இதனைத் தொடர்ந்து வரும் ஜூலை மாதம் முதல் இந்தியாவில் மனிதர்களின் உடலில் செலுத்தி கோவாக்சின் மருந்து சோதனை செய்யப்பட உள்ளது.*
*இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பு மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.*