பிளாக் மெயில் – திரை விமர்சனம் 3.5/5

நாயகன் ஜிவி பிரகாஷ் முத்துக்குமாரிடம் லோடு ஆட்டோ ஓட்டுகிறார். முத்துக்குமார் ஜீவிக்கு தெரியாமல் அந்த வாகனத்தில் போதை பொருளை கடத்துகிறார். ஆனால் அந்த ஆட்டோவை மர்ம நம்பர் ஒருவர் கடத்தி செல்கிறார். இந்த நிலையில் ஜீவியின் காதலியை பிடித்து வைத்துக் கொண்டு, கடத்தல் பொருளோ அல்லது அதற்கான பணமோ வராமல் உன்னுடைய காதலியை விடமாட்டேன் என்று முத்துக்குமார் கூறுகிறார்.

தனது காதலியை காப்பாற்றுவதற்காக பெரும் செல்வம் படைத்த ஸ்ரீகாந்தின் குழந்தையை கடத்தி அதன் மூலம் பிளாக்மெயில் செய்து பணத்தை பெற திட்டம் தீட்டுகிறார் ஜீவி. அதற்காக குழந்தையை கடத்த செல்லும்போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஜீவி கடத்த நினைத்த குழந்தை எங்கே சென்றது? ஜீவி தனது காதலியை காப்பாற்றினாரா? என்பதை படத்தின் மீதி கதை.

வழக்கம் போல கதைக்கு என்ன தேவையோ அதற்கு மிகையாகாமல் அளவாக கொடுத்து கதாபாத்திரமாகவே இயல்பான நடிப்பை வெளிப்படுத்துபவர் தான் ஜீவி பிரகாஷ். இந்தப் படத்திலும் அதே பார்முலாவை பயன்படுத்தி எனது நடிப்பால் அசத்தியிருக்கிறார். நாயகி தேஜு அனைத்து காட்சிகளிலும் அழகாக வந்து தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது திறமையை இன்னும் கொஞ்சம் வெளிக்கொண்டு வந்திருக்கலாம்.

பிந்து மாதவி, முத்துக்குமார், ஸ்ரீகாந்த், ரெடிங் கிங்க்ஸ்லி, லிங்கா, ரமேஷ் திலக் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

கண்ணை நம்பாதே மற்றும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களை இயக்கிய அனுபவத்தின் மூலம் இந்த படத்தில் திரைக்கதையை வேகமாக ஓட்டிச் சென்று இருக்கிறார் இயக்குனர் மு.மாறன்.

சாம் சி எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கோகுல் பினாய் ஒலிப்பதிவு செய்திருக்கிறார். ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்திருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கும் என்று கதையின் பின்னால் கண்களையும் மனதையும் பரபரப்பாக இடைவிடாமல் ஓட வைத்துக் கொண்டு இருந்தார் இயக்குனர். தரமான சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் ட்ரீட் தான்.

பிளாக் மெயில் – புல்லட் ஸ்பீட்