ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும், ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்க்ஷி அகர்வால், விவேக், யோகிபாபு, மனோ பாலா, மைனா, வேல ராமமூர்த்தி, மதுசுதன் ராவ், அமித் பார்கவ்,சம்பத் ராஜ், நளினி இவர்களுடன் சுந்தர் C நடிக்க, குஷ்பூ சுந்தர் C தயாரிப்பில் சுந்தர் C
இயக்கத்தில் நடிப்பில் உருவான படம் அரண்மனை 3.
ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் அரண்மனையில் பேய் அட்டகாசம் செய்கிறது. ஒரு பக்கம் குழந்தைகளுடன் அன்பாக விளையாடும் பேயாக இருந்தாலும் மறுபக்கம் வீட்டில் இருக்கும் வேலை ஆட்களை கொன்று வீட்டில் இருப்பவர்களை அச்சுறுத்துகிறது.
வெளிநாட்டில் தொழில் துவங்குவதற்காக இங்கு இருக்கும் அனைத்து சொத்துக்களையும் தனது மகள் பெயரில் எழுதிவிட்டு அங்கேயே இருக்கலாம் என எண்ணம் கொள்ளும் சுந்தர் C., தனது மகளை பார்ப்பதற்காக அரண்மனைக்கு வருகிறார். பின்பு அவரிடம் விஷயத்தை கூறுகிறாள் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெரோனிகா அரோரா.
பின்பு இளம் வயதில் நானும் இதை அனுபவித்துளேன் என ராஷி கண்ணா கூற பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து மகளுக்காக போராட நினைக்கிறார் சுந்தர்C.
இறுதியாக சுந்தர் சி. பேயை விரட்டினாரா? யாரை பழிவாங்க வந்தது? எதற்காக பழி வாங்குகிறது? என்பது மீதி கதை.
தனது முந்தைய படமான அரண்மனை 1 மற்றும் 2ல் இருப்பது போல் 3 கதாநாயகி, அதில் ஒருவர் பேய். கூட்டு குடும்பம், ஹீரோ இன்ட்ரோ சாங், குழந்தைகளுடன் விளையாடும் பேய், கிளைமாக்ஸில் பெரிய பூஜையுடன் கோயில், சூரிய அஸ்தமனம், கார் சேஸிங். படத்தின் இடையில் வரும் சுந்தர்C. காமெடியன்களை வெளுத்து வாங்கும் பேய் என ஒரே மாதிரி இயக்கியிருக்கிறார்.
முந்தைய படத்தில் இருக்கும் அளவை விட காமெடியன்கள் அதிகம் இருந்தாலும் நகைச்சுவைக்கு சிறிது பஞ்சம் தான்.
பின்னணி இசையில் சிறிது கவனம் காட்டியிருக்கலாம்
சத்யா C. மற்றபடி நல்ல பாடல்கள், ரசிக்கும் வகையில் நடனம் அமைந்திருக்கிறது.
செந்தில் குமாரின் கேமரா ஒர்க் சூப்பர் குறிப்பாக அரண்மனை, கோயில், மற்றும் சண்டை காட்சிகளை காட்டிய விதம் அருமை, பாராட்டுக்கள்.
படத்தின் முக்கிய தூணாக இருப்பது எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ், ஹாலிவுட் பட தரத்திற்கு ரசிக்கும் வகையில் இருந்தது. இன்னும் பல உயரங்கள் பென்னி ஆலிவருக்கு காத்திருக்கிறது.
ஆர்யாவை வைத்து படத்தின் எதிர்பார்ப்பை தூண்டியிருந்தாலும், குறைவான காட்சிகளில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்ததால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை.
வழக்கம் போல் ஆண்ட்ரியா மற்றும் ராஷி கண்ணா கலக்கல். சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் கொடுத்த பாத்திரத்தை கட்சிதமாக முடித்தார் சாக்க்ஷி.
யோகி பாபு மற்றும் விவேக் வரும் காட்சிகள் ஓரு சில இடங்களில் மட்டுமே நகைச்சுவையாக இருந்தது. ஆனால் எங்கும் சலிப்பில்லை.
மொத்தத்தில் குழந்தைகள் ரசிக்கும் படமாக அமைந்திருக்கிறது அரண்மனை 3.