இந்தியாவின் மிகச்சிறந்த படைப்பு, உலகின் பார்வைக்கு : அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானா நடித்த Gulabo Sitabo உலகளாவிய அளவில் அமேஸான் பிரைம் வீடியோவில் ப்ரீமியர் செய்யப்படவுள்ளது
அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள ஷூஜித் சிர்காரின் துடிப்பான டிராமெடி ஜூன் 12, 2020 அன்று 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அமேஸான் பிரைம் வீடியோவில் ப்ரீமியர் செய்யப்படவுள்ளது
சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, பிரைம் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும் ₹129 கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது.
மும்பை, இந்தியா, 14 மே 2020 – ஸ்ட்ரீமிங் சேவையில் பிரத்தியேகமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தி திரைப்படமான Gulabo Sitabo-ன் உலகளாவிய பிரீமியரை அமேசான் பிரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. ஷூஜித் சிர்கார் இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன் (Black, Piku), ஆயுஷ்மான் குரானா (Shubh Mangal Zyaada Saavdhan, Andhadhun) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் 2020 ஜூன் 12 ஆம் தேதி பிரத்தியேகமாக திரையிடப்படவுள்ளது மற்றும் இது உலகம் முழுவதும் 200 நாடுகளிலும் மற்றும் பிராந்தியங்களிலும் கிடைக்கும்.
“அமேசானில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு செவிமடுக்கிறோம் மற்றும் அதன் அடிப்படையில் எங்களது பணிகளை மேற்கொள்கிறோம்” என்று, அமேசான் பிரைம் வீடியோ, இந்தியாவின் உள்ளடக்கத்தின் இயக்குநரும் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் அவர்கள் கூறினார். “Gulabo Sitabo இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். பிரைம் வீடியோவில் Gulabo Sitaboவை பிரீமியர் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிறந்த சினிமா அனுபவங்களை எங்கள் வாடிக்கையாளரின் வீட்டு வாயிலில் வழங்குவதற்கான எங்கள் முயற்சியின் முதல் படியாக இது திகழ்கிறது” என்றும் கூறினார்.
“இது இந்திய பொழுதுபோக்குத்துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் விடியல்” என்று இயக்குனர் ஷூஜித் சிர்கார் கூறினார். “உலகளாவிய பார்வையாளர்களால் எங்களது இந்த கிரிட்டி டிராமெடியை பார்க்க முடியும் மற்றும் படத்தில் அவர்களுக்காக உள்ளவற்றை அனுபவிக்க முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். Gulabo Sitabo ஒரு நகைச்சுவையான, மனதை மகிழச்செய்யும் படமாகும் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இதை ரசிக்க முடியும். திரு. அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோருடன் இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு அருமையான அனுபவமாகும்” என்றும் கூறினார்.
“இந்திய பார்வையாளர்கள் Gulabo Sitabo-ன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், அமேசான் பிரைம் வீடியோ இப்போது எங்கள் வாடிக்கையாளர்களுக்காக திரைப்படத்தை ப்ரீமியர் செய்யும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பிரைம் வீடியோவில் Gulabo Sitabo-ன் உலகளாவிய வெளியீடு, 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுவதால், இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கிலும் படத்திற்கான அதிகபட்ச அணுகல் மற்றும் தெரிவுநிலை கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும். இப்புதிய வழங்குதல் குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம், இந்த வெளியீட்டின் மூலம் மீண்டும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்குகளை வழங்குவதில் குதூகலம் கொள்கிறோம்” என்று கூறினார், அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவின் இயக்குநரும் தேசியப் பொது மேலாளருமான திரு.கௌரவ் காந்தி அவர்கள்.
“Gulabo Sitabo ஒரு வாழ்க்கையின் ஒரு பகுதியான, டிராமெடி வகையைச் சேர்ந்த, வீட்டிலுள்ள குடும்பங்கள் அனைத்தும் கட்டாயம் பார்க்க வேண்டியது ஒரு படமாகும்” என்று நடிகர் அமிதாப் பச்சன் கூறினார். “ஷூஜித் முதல்முறையாக எனது கதாபாத்திரத்தின் தோற்றத்தை எனக்குக் காட்டியதிலிருந்து, எனது பங்கு குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். மாறுபட்ட தோற்றம் காரணமாக, ஒவ்வொரு நாளும் நான் கதாபாத்திரத்திற்குள் நுழைய கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஆனது. மிகவும் திறமையான எனது இணை நடிகர் ஆயுஷ்மான் குரானா வுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு ஒரு அருமையான அனுபவத்தை வழங்கியது. படத்தில் நாங்கள் தொடர்ந்து ஒருவருக்கொருவர் கேலி செய்வோம் என்றாலும், அவருடன் முதல்முறையாக பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. இந்த குடும்ப பொழுதுபோக்கிற்கு, புவியியல் எல்லைகளை கடக்கும் சக்தி உள்ளது மற்றும் Gulabo Sitaboவை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றும் கூறினார்.
நடிகர் ஆயுஷ்மான் குரானா கூறுகையில், “Gulabo Sitabo எனக்கு ஒரு சிறப்பான படம் ஆகும். இதில் விக்கி டோனருக்குப் பிறகு எனது வழிகாட்டியான ஷூஜித் டாவுடன் நான் மீண்டும் ஒன்றிணைந்தேன். இன்று நான் இருக்கும் நிலைக்கு காரணம் அவர் தான், அவரது கடைக்கண் பார்வை என் மீது மீண்டும் பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. திரு. அமிதாப் பச்சனுடன் முதல் முறையாக திரை இடத்தைப் Gulabo Sitabo பகிர்வர் எனக்கு ஒரு பெரிய தருணமாகும் மற்றும் இது எனது கனவு நிஜமானது போன்றதாகும். பல ஆண்டுகளாக அவருடன் பணியாற்ற நான் ரகசியமாக மிகவும் விரும்பினேன் மற்றும் ஷூஜித் டா இதைச் சாத்தியமாக்கியுள்ளதற்காக, நான் அவருக்கு என்றென்றும் கடன்பட்டிருப்பேன். ஒரு ஜாம்பவானுடன் பணியாற்றுவது எனக்கு உண்மையிலேயே மிகப்பெரிய மரியாதையாகும் மற்றும் இந்த அனுபவம் ஒரு நடிகனாக என்னை செழுமை படுத்தியதாக உணர்கிறேன். படம் பற்றி நான் விரும்புவது அதன் சுத்தமான எளிமைத்தன்மையே – ஒரு வீட்டு உரிமையாளருக்கும் வாடகைக்கு வருபவருக்கும் இடையிலான வேடிக்கையான நகைச்சுவை தருணங்கள் இந்த படத்தை மிகவும் சிறப்பானதாக ஆக்குகின்றன. படத்தையும் மற்றும் எங்கள் பந்தத்தையும் பார்வையாளர்கள் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்” என்றும் கூறினார்.
அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் நடித்துள்ள Gulabo Sitabo, இரண்டு தந்திரமான நபர்கள், தங்களுக்குள் யார் சிறந்தவர் என்று மேற்கொள்ளும் போட்டியில், பிறரை தங்கள் பக்கம் இழுத்து, தத்தமது நோக்கங்களுக்காக மேற்கொள்ளும் நகைச்சுவை ததும்பும் தருணங்களை உள்ளடக்கிய படமாகும். ஒரு ரைசிங் சன் பிலிம்ஸ் தயாரிப்பான Gulabo Sitaboவை ஷூஜித் சிர்கார் இயக்கியுள்ளார், ஜூஹி சதுர்வேதி திரைகதையை எழுதியுள்ளார் மற்றும் ரோனி லஹிரி மற்றும் ஷீல்குமார் ஆகியோரால் இதை தயாரித்துள்ளனர்.
The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜனல் தொடர்கள் மற்றும் விருதுகள்-வென்ற மற்றும் பரவலானப் பாராட்டுதல்களை வென்ற, உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs.Maisel போன்றவைகள் உட்பட்ட, ஆயிரக்கணக்கான சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுடன் இணைந்துள்ள Gulabo Sitabo அமேஸான் பிரைம் வீடியோவில் அமேஸான் பிரைம் உறுப்பினர்களுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி கிடைக்கப்பெறும். இச்சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கிடைக்கப்பெறும் உள்ளடக்கங்களும் உட்பட்டுள்ளன.
ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடோஃபோன், BSNL போன்றவற்றின் பிரைம் வீடியோ ஆப் – ல், பிரைம் உறுப்பினர்களால், Gulabo Sitabo – ஐ எந்த நேரத்திலும் மற்றும் எந்த இடத்திலும் பார்வையிட முடியும். மேலும், பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்களால் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் அனைத்து அத்தியாங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் மற்றும் எந்தவொரு இடத்திலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்வையிட முடியும். பிரைம் வீடியோ தற்போது இந்தியாவில், பிரைம் உறுப்பினர்களுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது பிரதி மாதம் ₹129 என்னும் கட்டணத்தில் கிடைக்கப்பெறும். புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிந்து கொள்ள வருகை தரவும் www.amazon.in/prime மற்றும் 30-நாட்கள் டிரையலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்.
அமேஸான் பிரைம் வீடியோ குறித்து
பல்வேறு விருதுகளை வென்ற, அமேஸான் ஒரிஜினல் தொடர்களின் தொகுப்புகள், ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்து விரும்பத்தக்க விஷயங்களையும் ஒரே இடத்தில் சுலபமாகக் கண்டறியத்தக்க வகையில் வழங்கும், பிரைம் உறுப்பினர்களுக்கான ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை பிரைம் வீடியோ ஆகும். மேலும் அறிய, பார்க்கவும் PrimeVideo.com.
• பிரைம் வீடியோவில் உட்பட்டுள்ளவை: Gulabo Sitabo ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜினல் தொடர்களான The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven, உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs. Maisel உட்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர்தன்மையின் ஒரு பகுதியாகக் கிடைக்கப்பெறுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகியவைகள் உட்பட, பல்வேறு மொழிகளில் பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
• உடனடி அணுகுவசதி : ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்களில் கிடைக்கப்பெறும் பிரைம் வீடியோ ஆப், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு கேமிங் சாதனங்களில் உறுப்பினர்கள் பிரைம் வீடியோ உள்ளடக்கங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்;ட்-பெய்டு சந்தாதாரர் திட்டங்களின் கீழும், பிரைம் வீடியோ நுகர்வோர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம்.
• மேம்படுத்தப்பட்ட அனுபவங்கள்: 4K Ultra HD – மற்றும் High Dynamic Range (HDR) இணக்கத்தன்மை கொண்ட உள்ளடக்கங்கள் வழியாக, ஒவ்வொரு பார்வையிடல்களையும் சிறப்பாக்கலாம். உங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின், பின்னணித் தகவல்களை IMDb – ன் ஆற்றலுடன், பிரத்தியேக X-Ray ஆக்சஸ் வழியாக, பார்த்து மகிழலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல் பதிவிறக்கங்கள் வழியாக, சேவ் இட் ஃபார் லேட்டர் செய்து, ஆஃப்லைன் பார்வையிடல்களையும் மேற்கொள்ளலாம்.
• பிரைம் உடன் உட்பட்டுள்ளது: பிரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.
பொது ஊடக ஹேண்டில்கள்:
@PrimeVideoIN
#GIBOSIBOonPrime
விளம்பரத் தொடர்பிற்கு:
himalee@amazon.com
pv-in-pr@amazon.com