*சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும்
*தி சோஷியல் ரெக்கனிங் (THE SOCIAL RECKONING)*
ஆரோன் சோர்கின் எழுதி, இணைந்து தயாரித்து, இயக்கிய ‘தி சோஷியல் ரெக்கனிங்’ திரைப்படம், ‘தி சோஷியல் நெட்வொர்க் (2010)’ படத்தின் அடுத்த பாகம் என்றாலும் முந்தைய பாகத்தோடு தொடர்பில்லாத தனிப்படமாகும். இப்படம் 2021-ஆம் ஆண்டில் பிரான்சிஸ் ஹாகன் மற்றும் ஜெஃப் ஹார்விட்ஸ் ஆகியோரால் வெளிப்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தகவல் கசிவு பற்றிய ரகசியங்களைப் பேசுகிறது. இத்திரைப்படத்தின் உலகளாவிய முதல் லண்டனில் உள்ள கர்ஸன் மேஃபேர் சினிமா திரையரங்கில் நடைபெற்றது.
கதைச்சுருக்கம்- தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) பத்திரிகையில், 2021-ஆம் ஆண்டில் வெளியான அதிரடி புலனாய்வுத் தொடரான ‘தி ஃபேஸ்புக் ஃபைல்ஸ்’ கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் இளம் பொறியாளரான பிரான்சிஸ் ஹாகன் (மைக்கி மேடிசன்), தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபரான ஜெஃப் ஹார்விட்ஸ் (ஜெரமி ஆலன் ஒயிட்) என்பவரின் உதவியை நாடுகிறார். இவர்கள் இருவரும் இணைந்து மேற்கொள்ளும் ஓர் ஆபத்தான பயணம், இறுதியாக ஃபேஸ்புக் எனும் சமூக ஊடகத்தின் மிக ரகசியமான உண்மைகளை அம்பலப்படுத்துவதில் முடிகிறது. இவ்வாறாக, 1000-க்கும் மேற்பட்ட முகநூலின் மிக முக்கியமான மற்றும் ரகசிய ஆவணங்களை அவர்கள் வெளியில் கொண்டு வருகின்றனர். இந்த உண்மைச் சம்பவத்தைத்தான் இத்திரைப்படம் விவரிக்கிறது.
CREDITS –
எழுத்து & இயக்கம் – Aaron Sorkin
நடிகர்கள் – Mikey, Madison, Jeremy Allen White, Jeremy Strong, Bill Burr, Betty Gilpin etc.
Based on the televi ஒளிப்பதிவு – Jeff Cronenweth
படத்தொகுப்பு -Alan Baumgarten
இசை – Alexandre Displat
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா_ வெளியீடு

