எழுத்திலிருந்து விண்வெளிக்கு: ரியான் கோஸ்லிங் எப்படி ப்ராஜெக்ட் ஹெயில் மேரியில் இணைந்தார்!

*எழுத்திலிருந்து விண்வெளிக்கு: ரியான் கோஸ்லிங் எப்படி ப்ராஜெக்ட் ஹெயில் மேரியில் இணைந்தார்*

ப்ராஜெக்ட் ஹெயில் மேரி பெரிய திரைக்குத் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, கதை ஒரு எளிய கையெழுத்துப் பிரதியுடன் தொடங்கியது.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தனது அதிகம் விற்பனையாகும் நாவலான தி மார்ஷியனுக்குப் பெயர் பெற்ற எழுத்தாளர் Andy Weir, தனது புதுப் புத்தகத்தின் ஆரம்ப வரைவை ரியான் கோஸ்லிங்குடன் பகிர்ந்து கொண்டார். அவரது கோரிக்கை நேரடியானதாக மட்டுமில்லாமல் உயர்ந்த லட்சியமானதாகவும் இருந்தது. கோஸ்லிங் திரைப்படத் தழுவலில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு தயாரிப்பாளராகவும் வர வேண்டும் என்று Weir விரும்பினார்.

கோஸ்லிங் கையெழுத்துப் பிரதியை ஒரே அமர்வில் படித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கதையின் பிரம்மாண்டத்தாலும், அதன் மையக் கதாபாத்திரத்தின் மனிதநேயத்தாலும் உடனடியாக ஈர்க்கப்பட்டுள்ளார். தனது பாத்திரத்தைப் பற்றி கோஸ்லிங், “இது ஒரு காவியப் பயணம். மேலும் ரைலேண்ட் கிரேஸ் எந்த வகையிலும் சிறந்தவன் அல்ல. அவன் எந்த வகையிலும் துணிச்சலானவன் அல்ல. ஒரு ஹீரோவாக இருக்கவேண்டும் என்ற எந்த எண்ணமும் ஆசையும் இல்லை. ஆனால் அவன் தொடர்ந்து முயற்சி செய்தே கொண்டே இருப்பான்” என்றார்.

Weir தொடர்பு கொண்ட நேரமும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. உலகளாவிய கோவிட் 19 தொற்றுநோயின் தொடக்கத்தில், உலகம் முழுவதும் படத்தயாரிப்புகள் மூடப்பட்டுத் திரையரங்குகள் இருளில் மூழ்கிப் பெரிய அளவிலான திரைப்படத் தயாரிப்பின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த நிச்சயமற்ற தன்மையை உருவாகியிருந்த பொழுது, இந்தக் கையெழுத்துப் பிரதி கோஸ்லிங்கை அடைந்தது.

கோஸ்லிங் அந்தத் தருணத்தைத் தெளிவாக நினைவுகூர்ந்து, ” காவியத்தன்மை கொண்ட ஓர் ஒப்பற்ற திரையரங்க அனுபவத்தைத் தரக் கூடிய வாழ்நாள் வாய்ப்பை நான் பெற்ற பொழுது, திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன” என்றார். எனினும், உலகம் எத்தகைய சூழலை எதிர்கொண்டிருந்ததோ, அதைக் கதையின் சாராம்சம் வலுவாகப் பிரதிபலிப்பதாகக் கோஸ்லிங் உணர்ந்தார்.

Weir -இன் அதிகம் விற்பனையாகும் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம், தான் யார் என்பதையும், தன் பணி என்ன என்பதையும் மறந்த ரைலண்ட் கிரேஸ் (ரியான் கோஸ்லிங்) என்ற தனித்த விண்வெளி வீரர் மர்மமான விண்கலம் ஒன்றில் விழித்தெழுகிறார். பூமியைக் காப்பாற்றுவதற்கான மனிதகுலத்தின் கடைசி நம்பிக்கை அவர் தான் என்பதைக் கண்டறிகிறார்.

அற்புதமான அறிவியல் புனைகதைக்குத் திரையில் உயிர் கொடுத்தவர்கள் புகழ்பெற்ற திரைப்படத் இயக்குநர்களான பில் லார்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லர் இணையாகும். அவர்கள் இயக்கிய இத்திரைப்படம், அறிவியல், கண்கவர் திரைக்காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் கதைசொல்லல் ஆகியவற்றின் கலவையாக ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு உறுதியளிக்கிறது. Sandra Hüller, Lionel Boyce, Ken Leung மற்றும் Milana Vayntrub உள்ளிட்ட நட்சத்திர துணை நடிகர்களைக் கொண்ட இந்தப் படம், உணர்ச்சிகள் நிரம்பிய சாகசத்தைப் பெரிய திரையில் கொண்டு வருகிறது.

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியாஸால் தயாரிக்கப்பட்டு, சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் ரிலீசிங் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும், ரியான் கோஸ்லிங் நடித்த ‘ப்ராஜெக்ட் ஹெயில் மேரி” திரைப்படம், மார்ச் 26, 2026 அன்று இந்தியத் திரையரங்குகளில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஐமாக்ஸ் மற்றும் பிற பிரீமியம் பெரிய வடிவங்களில் வெளியாகின்றன.

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியாஸால் தயாரிக்கப்பட்டு, சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் ரிலீசிங் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும், ரியான் கோஸ்லிங் நடித்த ‘ப்ராஜெக்ட் ஹெயில் மேரி” திரைப்படம், மார்ச் 26, 2026 அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஐமாக்ஸ் மற்றும் பிற பிரீமியம் பெரிய வடிவங்களில் வெளியாகின்றன.