வங்காள விரிகுடா – திரை விமர்சனம் 4/5

தூத்துக்குடி பகுதி மக்களுக்கு துணையாக இருந்து, அவர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் அண்ணாச்சி (குகன் சக்ரவர்த்தி). மக்களுக்காக பல நல்ல செயல்களை செய்து வருபவர், தனது முன்னாள் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டதை நினைத்து உள்ளுக்குள் வருந்திக்கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில், நண்பனின் மகள் திருமணம் செய்ய வற்புறுத்த, அவளை மணந்து கொள்கிறார். திருமணம் செய்தாலும், இருவரும் கணவன்–மனைவியாக இல்லற வாழ்க்கை வாழாமல் இருக்கின்றனர். அதே சமயம், முன்னாள் காதலி கணவனால் கொடுமைப்படுத்தப்படுவதை அறிந்து, அவனை கொன்று காதலியிடம் தனது அன்பை வெளிப்படுத்துகிறார்.

இந்த இரு உறவுகளால் அண்ணாச்சி அனுபவிக்கும் வேதனை, துரோகம் மற்றும் மக்கள்மீது அவர் வைத்திருக்கும் பாசம் ஆகியவற்றை மையமாக கொண்டு உருவான படமே வங்காள விரிகுடா.

கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்ட சுமார் 21 க்ராஃப்ட் பணிகளை தனியாளாக செய்து முடித்துள்ள குகன் சக்ரவர்த்தி, பாடல்கள், ஆக்‌ஷன், நடிப்பு என அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தை ஆண்ட மற்றும் ஆண்டுகொண்டிருக்கும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் படம் அமைந்துள்ளது. அப்துல் கலாம் மீது அவருக்குள்ள மரியாதையும் தெளிவாக வெளிப்படுகிறது.

படத்தின் நீளம் சற்று அதிகமாகவும், காட்சிகள் வேகமாக ஜம்ப் ஆகிச் செல்வது சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆரம்பத்தில் அண்ணாச்சிக்கு ஆதரவாக இருக்கும் பொன்னம்பலம், வில்லனாக மாறும் தருணம் இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம். கதாபாத்திரங்களை மேலும் ஆழமாக பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இருந்தது.

இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு நல்ல பலமாக அமைந்துள்ளது.

Story, Screenplay, Lyrics, Songs, Music, Cinematography, Art Direction, Dance, Fight Training (Individual), Costumes, Stills, Makeup, Playback Singing, Background Music, Production Design, Titling, Hairstyling, Outdoor Set Management, Production, and Direction – Guhan Chakravarthy

வங்காள விரிகுடா – குகன் சக்ரவர்த்தியின் அற்புதமான கடல்