சினிமாவின் தொடக்க காலகட்டத்தில் கதை ஆரம்பமாகிறது. மாபெரும் இயக்குனராக இருக்கும் சமுத்திரக்கனி ஒரு முறை கூத்தை பார்க்கிறார் அந்த கூத்தில் துல்கர் சல்மானின் நடிப்பை பார்த்து மிகப்பெரிய கதாநாயகனாக உருவாக்குகிறேன் என்று அழைத்து வருகிறார். முதல் படத்திலிருந்து மாபெரும் வெற்றி அடைந்து மற்ற இயக்குனர்களுடன் பணியாற்றி நடிப்பு சக்கரவர்த்தி என்ற புகழோடு வலம் வருகிறார் துல்கர் சல்மான்.
இந்நிலையில் சாந்தா என்ற அம்மாவின் கதையை படமாக்க நினைக்கிறார் சமுத்திரக்கனி. இந்த படத்தில் நாயகனாக நடிக்க முதல் திரை அழைக்கிறார். துல்கர் சம்மதம் தெரிவிக்கிறார் ஆனால் இப்படத்தில் இறுதி காட்சியில் நான் இறந்து போவது போல் வருகிறது இதை என் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஆகையால் கதையை மாற்றும்படி கூறுகிறார். என்னால்தான் நீ இவ்வளவு பெரிய நடிகனாக உயர்ந்து இருக்கிறாய் என்னுடைய கதையை மாற்ற சொல்கிறாயா என்று சமுத்திரகனி கோபம் அடைகிறார். இதனால் பாதியிலேயே படம் நிற்கிறது.
சிறிது காலம் கழித்து தயாரிப்பாளர் சமாதானம் செய்து மீண்டும் படத்தை துவங்குகிறார்கள். அதே நேரத்தில் படத்தின் பெயர் சாந்தா இல்லை காந்தா என்று துல்கர் சல்மான் கூறுகிறார். நாயகியாக அகதி முகாமிலிருந்து பாக்கியஸ்ரீயை அழைத்து வருகிறார் சமுத்திரக்கனி. குருவின் மீதிருக்கும் மரியாதை கலந்த பக்தியால் சமுத்திரக்கனி சொல்வதை செய்கிறார். சில காட்சிகளில் துல்கரை எதிர்த்து நிற்கிறார். இதில்கருக்கு பாக்கியஸ்ரீ மீது கோபம் வருகிறது.
துல்கர் படத்தை முடித்துக் கொடுத்தாரா? சமுத்திரக்கனியின் கதை அப்படியே படமாக்கப்பட்டதா? தன்னை எதிர்த்த பாக்கியஸ்ரீயை துல்கர் என்ன செய்தார் என்பதை படத்தின் மீதி கதை.

துல்கர் சல்மான் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அதேபோல் அந்த கதாபாத்திரத்திற்கு தன்னைவிட வேறு யாரும் பொருந்த மாட்டார்கள் என்று கூறும் அளவிற்கு சிறப்பாக நடிக்க கூடியவர் என்று இந்த படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். காட்சிகள் காட்சி தன்னை செதுக்கி மேன்மேலும் மெருகேற்றிக் கொண்டே மெய்சிலிர்க்க வைக்கிறார். சமுத்திரக்கனி மீதிக்கும் மரியாதை மற்றும் அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற காட்சியிலும், சமுத்திரக்கனி சொல்லிக் கொடுத்து நடிக்கும் காட்சியிலும், பாக்கியஸ்ரீயை காதலிக்கும் காட்சியிலும், இறுதி காட்சியிலும், இது மட்டுமல்ல ஒவ்வொரு காட்சியிலுமே அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சமுத்திரக்கனி கர்வமான இயக்குனர் என்று காட்சிக்கு காட்சி பதிவு செய்திருக்கிறார். துல்கர் தன்னை மதிக்கவில்லை என்று அவரை எதிர்கொள்ளும் காட்சியிலும், பாக்கியஸ்ரீயை பெரிய நடிகை ஆக்கியே தீர வேண்டும் என்ற உறுதியும், தன்னுடைய அம்மாவின் கனவை நினைவாக்க வேண்டும் என்ற லட்சியத்திலும் தன்னுடைய கதாபாத்திரம் சிதறாமல் நடித்திருக்கிறார். துல்கர்க்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பது போன்ற காட்சியில் தன்னை இயக்குனராகவே பதிவு செய்திருக்கிறார்.
ராணா தனக்கு கொடுத்த சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் தான் வரும் காட்சியில் அவரை ஆட்சி செய்கிறார். அவரை தவிர வேறு யாரையும் பார்க்க முடியாத அளவிற்கு பார்வையை அவர் மீது நிலைக்கும் படியான அசால்ட்டான நடிப்பை கொடுத்து தட்டி தூக்குகிறார். கருப்பு வெள்ளை காலத்தில் போலீஸ் உடை இப்படித்தான் இருந்திருக்கும் அதற்கு ஏற்ற உடல்மொழி மூலம் நடிப்பை பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு இயல்பாக நடித்திருக்கிறார்.
பாக்கியஸ்ரீ யார்? இத்தனை வருடம் எங்கிருந்தார்? நிச்சயம் இதற்கு முன்பு பல படங்களில் நடித்திருக்க வேண்டும். முதல் படத்தில் இப்படியான நடிப்பை கொடுக்க முடியாது என்று ஆணித்தனமாக கூறும் அளவிற்கு அனுபவம் வாய்ந்த நடிகர்களுக்கு இணையாக சிறப்பாக நடித்திருக்கிறார். துல்கரை எதற்கும் காட்சியில் சமுத்திரக்கனி மீதான பக்தியை ஆழமாக வெளிப்படுத்தி இருக்கிறார். பாக்ய ஸ்ரீயின் கண்கள் உதடுகள் முகத்தில் இருக்கும் தசைகள் என அனைத்தும் நடித்திருக்கிறது மேலும், அவர் முடி, அணிந்திருக்கும் உடை, ஆபரணங்கள், என ஒவ்வொன்றுமே உயிர்ப்போடு இருக்கும் அளவிற்கு அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த வருடத்திற்கான சிறந்த நடிகை என்ற தேசிய விருது பெற்றாலும் வியப்பில்லை. வாழ்த்துகள் பாக்கியஸ்ரீ.

இவர்கள் நால்வருடன் ரவீந்திர விஜய், வையாபுரி, பிரிஜேஷ் நாகேஷ், பரதன், பக்ஸ், நிழல்கள் ரவி, ஜாவா சுந்தரேசன், காயத்ரி சங்கர், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து முக்கிய கதாபாத்திரங்களுக்கு பக்க பலமாக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள்.
சிறந்த இயக்குனர்கள் யாரிடமாவது உதவியாளராக பணியாற்றாமல் இப்படி ஒரு படத்தை இயக்க முடியாது என்று கூறும் அளவிற்கு முதல் படத்திலேயே பாராட்டை பெறுகிறார் இயக்குனர் செல்வமணி. ஒரு காட்சியில் படபிடிப்பு தளத்தில் இருக்கும் உதவியாளர்கள் ஒரு பொருளை இன்னொரு இடத்திற்கு இடம் மாற்றும் போது கீழே விழுந்து காலில் அடிபடுவது போன்ற இயல்பான காட்சியை நுட்பமாக இயக்கியிருக்கிறார். கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் இருந்திருந்தால் மட்டுமே இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்று கூறும் அளவிற்கு ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக கவனமாக செய்திருக்கிறார் செல்வமணி செல்வராஜ். ஒவ்வொரு கலைஞர்களிடம் இருக்கும் நடிப்பு திறமையை இலகுவாக வெளிப்படுத்த வைத்திருக்கிறார். தான் எழுதிய கதாபாத்திரத்திற்கு இவர்கள் தான் பொருத்தமாக இருப்பார்கள், இந்த காட்சிக்கு இந்த அளவு தான் நடிப்பு தேவை என்பதை கடுகளவும் கவனம் குறையாமல் இயக்கியிருக்கிறார். இந்திய சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்று சுட்டிக் காட்டும் அளவிற்கு வளர வாழ்த்துகள்.
கலை இயக்குனர் ராமலிங்கம் கருப்பு வெள்ளை காலகட்டத்தில் திரைக்குள் பயணிக்க வைத்திருக்கிறார். கருப்பு வெள்ளை சினிமா எப்படி இருக்கும் அதன் படப்பிடிப்பு தளம் எப்படி இருக்கும் என்பதை அழகாக காட்சிப்படுத்தி தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். அவர் படப்பிடிப்பு தளத்தில் உபயோகப்படுத்திய அனைத்து பொருட்களும், குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் கதவை நகர்த்தும் போது பார்வையாளர்களின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறார் இயக்குனர்.
இந்த காட்சி தேவை இல்லை, இந்த சில காட்சிகள் படத்திற்கு தொய்வு ஏற்படுத்துகிறது என்று கூற முடியாத அளவிற்கு கதையை அடுத்தடுத்து நகர்த்தி கூர்மையான படத்தொகுப்பாளர் என்று நிரூபித்து இருக்கிறார் லீவேலின் அந்தோணி கான்செல்வெஸ்.
ஜானு சுந்தரின் இசை படத்திற்கு தூணாக அமைந்திருக்கிறது. கடைக்கு ஏற்ப ஆர்ப்பாட்டம் இல்லாத இசையை கொடுத்திருக்கிறார். அதிலும் 1000வது விழாவில் துல்கர் பாடும் காட்சியில் ரசிகர்களின் ஆரவாரத்தையும், துல்கரின் பாடல் வரிகள் புரியும்படியும் நேர்த்தியாக இணைத்து இருக்கிறார்.
மேக்கப், உடைகள் என்று ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறார்கள்.

Cast & Crew Details:
Written & Directed – Selvamani Selvaraj
Produced – Rana Daggubati, Dulquer Salmaan, Prashanth Potluri, Jom Varghese
Production House – Spirit Media, Wayfarer Films
DOP – Dani Sanchez Lopez
Editor – Llewellyn Anthony Gonsalvez
Art Director – Ramalingam
Music – Jhanu Chanthar
Executive Producer – SaiKrishna Gadwal, Sujai James Line Producer – Sravan Palaparthi
Additional Dialogues & Story Consultant – Thamizh Prabha
Additional Screenplay – Thamizh Prabha
Costumes – Poojita Tadikonda, Archana Rao, Harmann Kaur DI colourist – Glen Denis Castinho Sound Design – Allwin Rego, Sanjay Maurya Marketing Head – Pasuparthy Sona Raju
Assistant Line Producer – Challa Chandra Shekar
VFX – Deccan Dreams
Telugu PRO – Vamsi Sekhar Tamil PRO – Suresh Chandra/Abdul Nasser
Publicity Design – Aesthetic Kunjamma, TooSid
காந்தா – படமல்ல; ஆகச்சிறந்த காவியம்!

