காடு வெட்டி குருவின் வாழ்க்கை வரலாறை இயக்குனர் வ கௌதமன் கமர்சியல் படமாக உருவாக்கியிருக்கிறார். காடுவெட்டியைச் சேர்ந்த குரு என்பவர் வன்னிய சமூகத்திற்காகவும், பிற சமூகத்திற்காகவும் போராடியவர். இருப்பினும் பெரும்பாலும் வன்னிய சமூகத்திற்கே போராடினார் வன்னிய சமுதாய தலைவர் காடுவெட்டி குரு என்று வரலாறு கூறுகிறது.
பட்டியலின மக்களுக்காக போராட செல்கிறார் சமுத்திரக்கனி. அங்கே ஆடுகளம் நரேனால் கொல்லப்படுகிறார். சமுத்திரக்கனியின் மகன் சிறுவயதாக இருப்பதால் அப்பாவைக் கொன்ற ஆடுகளம் நரேனை எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், வளர்ந்த பிறகு கொலை செய்கிறார் சமுத்திரக்கனியின் மகன் வ கௌதமன்.
இதனைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு எதிராக, அக்குற்றச் செயலை செய்தவர்கள், மண்ணை சுரண்டும் தொழிலதிபர்கள் என தொடர்ச்சியாக மண்ணுக்கும் மக்களுக்கும் யாரெல்லாம் தீங்கு இழைக்கிறார்களோ அவர்களை கொல்வதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கிறார் வ கெளதமன்.
இப்படி அநீதிக்கு எதிராகவும், மக்களுக்காக போராடும் வ கௌதமன் கெடுதல் செய்பவர்களை அழித்தாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.
வ கௌதமன் காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் காடுவெட்டி குருவாகவே வாழ்ந்திருக்கிறார். அவர் பேசும் வீர வசனம், அனல் பறக்கும் பார்வை, அதிர வைக்கும் சண்டைக் காட்சிகள் என மிரட்டியிருக்கிறார்.
நாயகிக்கு பாடல் பாடுவது, நடனம் ஆடுவது, சொல்லிக் கொடுக்கும் வசனங்களை பேசுவது என தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார்.
சமுத்திரக்கனி, பிரபாகர், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், சரண்யா பொன்வண்ணன், ரெடின் ஆகியோர் தங்களுடைய பாத்திரங்களை உணர்ந்து நடித்மமதிருக்கிறார்கள்.
திரைக்கதை துண்டு துண்டாக நிற்பதால், ஒரு கதையாக செல்லாமல் இருந்து படத்திற்கு மிகப்பெரும் சறுக்கல் தருகிறது. மேலும், சரண்யா பொன்வண்ணன் தனது மகன் கையில் அரிவாளைக் கொடுத்து வெட்டு என்று கூறுவது ஓவர் பில்டப்பாக தோன்றுகிறது.
பலரால் அறியப்படாத வட தமிழகத்தை தன் கட்டுக்குள் வைத்திருந்த ஒரு தலைவனைப் பற்றிய கதை தான் இப்படம். ஆனாலும், மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் அதிகமாகவும், நாங்கள் வீரன், வீராதி வீரன் என்று காட்சிக்கு காட்சி சொல்லிக் கொண்டே இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.
பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது, ஆனால், பின்னணி இசை ஓவர் இறைச்சலாக உள்ளது. ஒளிப்பதிவு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
பல அரசியல் பேசயிருந்தாலும், அரசுக்கு எதிராக போராடுவதும், வீரத்தனம் காட்டுவதும் வேறு வேறு என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவான திரைக்கதையோடு கூறியிருக்கலாம்.
வ கெளதமனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் படையாண்ட மாவீரா. இப்படத்தின் முதன்மை ஹீரோவாக இவரே நடித்திருக்கிறார்.
படத்தில் மேலும், சமுத்திரக்கனி, மன்சூர் அலிகான், சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்க்ஸ்லி, ஆடுகளம் நரேன், புஜிதா, மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, பிரபாகர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை சாம் சி எஸ் கவனித்திருக்கிறார்.
வி கே ப்ரொடக்ஷன்ஸ் படத்தினை தயாரித்திருக்கிறது. கோபி ஜெகதீஸ்வரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படையாண்ட மாவீரா – சலிப்பூட்டும் வீரம்