குமார சம்பவம் – திரைவிமர்சனம் 3.5/5

குமரன் தியாகராஜன் ஒரு மாதத்தில் வீட்டை விற்று அந்த பணத்தில் படம் இயக்க நினைக்கிறார். இந்நிலையில், அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் குமரவேல், திடீரென இறந்துவிடுகிறார். இது கொலையா அல்லது தற்கொலையா என்று போலீஸ் விசாரணை நடத்துகிறது. அதில் குமரன் கொலையாளியாக இருக்கக் கூடும் என்று சந்தேகப்படுகிறது காவல்துறை.

குமரன் கொலை செய்தாரா? அல்லது தற்கொலையா? குமரனின் படம் இயக்கினாரா? என்பதை படத்தின் மீதிக்கதை.

கதைக்கேற்றபடி குமரன் நாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். குமரனுக்கு நகைச்சுவையும் பொருந்தியுள்ளது. இன்னொரு நாயகன் குமரவேல், போராட்டம், புரட்சி, சமூக சிந்தனை என ஒரு போராளியாக வாழ்ந்திருக்கிறார். இவர் பேசி நடித்த வசனங்கள் இன்னமும் இங்கு உள்ளது. ஜி.எம் குமார் அனுபவ நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். குமரனின் தங்கையாக நடித்தவர் மற்றும் காதலியாக நடித்தவர் இருவருமே அழகாக நடித்துள்ளார்கள்.

பாலசரவணன் மற்றும் வினோத் சாகர் நடிப்பில் அசத்தியுள்ளார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையாக படமாக இருந்தாலும், இரண்டாம் பாதி தான் வலு சேர்த்துள்ளது. ஆனால், இறுதிக் காட்சியில் நல்ல கருத்துகளை கூறியுள்ளார் இயக்குனர், பாராட்டுகள்.

இசையும், ஒளிப்பதியும் படத்திற்கு கச்சிதமாக இருந்தாலும், முதல் பாதியில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

குமார சம்பவம் – நகைச்சுவையில் கருத்து கூறிய சம்பவம்