நஸ்லேன், சந்து சலீம்குமார் மற்றும் அருண்குமார் மூவரும் உயர் படிப்பிற்காக கேரளாவில் இருந்து பெங்களூருக்கு செல்கின்றனர். அங்கு எதிர் வீட்டில் இருக்கும் கல்யாணி பிரியதர்ஷினி கண்டதும் காதல் கொள்கிறார் நஸ்லேன். ஒரு நாள் கல்யாணி பிரியதர்ஷினை கடத்தி செல்கிறார்கள். அதை பார்த்த நஸ்லேன் அவரைக் காப்பாற்ற பின் தொடர்ந்து செல்கிறார். அங்கு கல்யாணத்துக்கு அமானுஷ்ய சக்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். இந்நிலையில் காவல்துறை அதிகாரியாக சாண்டியும் கல்யாணியை தேடுகிறார்.
கல்யாணிக்கு அந்த அமானுஷ்ய சக்தி எப்படி வந்தது? அவர் கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பித்தாரா? நெஸ்லின் காப்பாற்றினாரா? சாண்டி எதற்காக கல்யாணியை தேடுகிறார்? என்பதை படத்தின் மீதிக் கதை.
சந்திரா கதாபாத்திரத்தில் அமைதியான பெண்ணாகவும், தேவைப்படும் நேரத்தில் அதிரடி ஆக்சன் நாயகியாகவும் அதிசய வைக்கிறார் கல்யாணி பிரியதர்ஷின். படத்தில் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று அதற்கு ஏற்ப தன் பொறுப்பை உணர்ந்து தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார் கல்யாணி.
நஸ்லேன் அப்பாவி நாயகனாக கல்யாணியை விரும்பும் காதலனாக மென்மையான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
சாண்டி காவல்துறை அதிகாரியாக தன்னுடைய கதாபாத்திரத்தில் பார்ப்பவர்களுக்கு கோபம் வரும் அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
அமானுஷ்ய சக்திகளை கொண்டவர்கள் பற்றி கதையாக கேட்டிருப்போம், படித்திருப்போம். அதை மிக அழகான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு மேலும் பலத்தை சேர்த்திருக்கிறது.
டாமினிக் அருண் இயக்க, Wayfarer Films நிறுவனம் தயாரித்திருக்கிறது. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கிறார்.
லோகா – சேப்டர் ஒன்று சந்திரா – அதிசயம் நிகழ்த்தும் அமானுஷ்யம்