காதலித்து திருமணம் செய்து கொண்டு அழகான வாழ்க்கை வாழ்ந்து வரும் தம்பதிகள் தான் வனிதாவும் ராபர்டும். இவர்கள், தாய்லாந்தில் வசித்து வரும் இவர்களுக்கு குழந்தை இல்லை.
வனிதா 40வயதை எட்டியதும், தனக்கு வயதாகிவிட்டதாக எண்ணுகிறார். குழந்தை இல்லை என்றால் நம்மை யார் பார்த்துக் கொள்வார்கள் என்றெண்ணி, குழந்தை பெற்றுக்கொள்ளும் தனது ஆசையை ராபர்ட்டிடம் கூறுகிறார்.
ராபர்ட் அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர். இந்த சூழலில், வனிதா கர்ப்பமாக, ராபர்ட்க்கு தெரியாமல் வனிதா குழந்தையை பெற்றெடுக்க நினைக்கிறார்.
வனிதா கர்ப்பமாக இருந்தது ராபர்ட்டுக்கு தெரிந்ததா? வனிதா குழந்தையை பெற்றெடுத்தாரா? என்பதை படத்தின் மீதிக் கதை.
வனிதாவே இந்த படத்தை இயக்கியதால் தன்னுடைய கதாபாத்திரத்தை அளவாக உருவேற்றி இருக்கிறார். மேலும், நடிப்பில் அவருக்கு அனுபவம் இருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது. ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்திற்கு பிளஸ்.
ராபர்ட் தனது இயல்பான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். வனிதாவின் தாயாக நடித்த ஷகிலாவின் நடிப்பு மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் எரிச்சலடைய செய்கிறது.
இந்நிலையில், ஸ்ரீமனின் காட்சிகள் எதற்கு என்று கேள்வி எழுப்புகிறது. சென்டிமென்ட் காட்சிகள் படத்திற்கு உறுதுணையாக இல்லை.
ஸ்ரீகாந்தின் பின்னணி இசை சற்று ஆறுதலாக இருக்கிறது.
ஆந்திராவில் எடுக்கப்பட்ட காட்சிகளை விட தாய்லாந்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் ரசிக்கும் வகையில் உள்ளது.
வனிதா விஜய்குமார் இயக்கத்தில் வனிதா விஜயகுமார், ராபர்ட், ஷகிலா, பவர்ஸ்டார், பாத்திமா பாபு, செப் தாமு, ஸ்ரீமன், கிரண், ஆர்த்தி, கணேஷ், ரவிகாந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “மிஸ்சஸ் & மிஸ்டர்”.
தாய்லாந்து, லண்டன் மற்றும் இந்தியா என மூன்று வெவ்வேறு நாட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தினை மூன்று இடங்களிலும் ராஜபாண்டி, விஷ்ணு ராமகிருஷ்ணன், கபில் என்ற மூன்று ஒளிப்பதிவாளர்களால் படமாக்கப்பட்டிருக்கிறது.
தாயின் பெருமையையும் அருமையையும் மட்டும் கூறிவிட்டு ஆபாசத்தை தவிர்த்து இருக்கலாம் வனிதா.
ஸ்ரீகாந்த் தேவா படத்திற்கு இசையமைக்க, வனிதாவின் மகள் ஜோவிகா விஜய்குமார் படத்தினை தயாரித்திருக்கிறார்.
மிஸஸ் & மிஸ்டர் – எஸன்ஸ் இல்லா கெமிஸ்ட்ரி