சுயசரிதை சார்ந்த திரைப்படமான ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்டின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் பிரீமியரை அமேசான் பிரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. டிரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஆர். மாதவன் முக்கியக் கதாப்பாதிரமேற்று நடிப்பதோடு இப்படத்தின் மூல இயக்குனராகவும் அறிமுகமாகிறார். அவருடன் சிம்ரன், ரஞ்சித் கபூர் போன்ற திறமை வாய்ந்த நடிகர்கல் இணைந்து நடித்துள்ளனர் மற்றும் இதில் சூர்யா கவுரவ வேடத்தில் தோன்றுகிறார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ள இத் தமிழ் திரைப்படத்தை இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஜூலை 26, 2022 முதல் ஸ்ட்ரீம் செய்யலாம்.
இந்த கதையை உலகிற்கு எடுத்துச் செல்வது எனக்கு பெருமை தருவதாக இருக்கிறது” என்று ஆர்.மாதவன் கூறினார். “திரைப்படம் பெற்றுள்ள அபிமானம் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது மற்றும் ஸ்ட்ரீமிங் மூலம் புதிய மைல்கற்களை எட்டுவதைக் கான பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். நம்பி சாரின் இந்த நம்பமுடியாத கதைக்கு முறையான வடிவத்தைக் கொடுத்து வெளிக் கொணர்வது இன்றியமையாத ஒன்று. பலரை உற்சாகப்படுத்தும், அறிவூட்டும், மகிழ்விக்கும் விதமாக இக்கதை அமேசான் பிரைம் வீடியோ மூலம் பல குடும்பங்களைச் சென்றடையவுள்ளது எனக்கு மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது.”என்று அவர் மேலும் கூறினார்.
1994 இல் உளவு பார்த்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம், அவரது நேர்மையான சாதனைகள், நாட்டின் விண்வெளிப் பயணத்தின் மீதான அவரது ஆர்வம், ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு குறித்து விக்கும் இக்கதை இறுதியில் தவறுதலாக எவ்வாறு மிகப்பெரிய தனிப்பட்ட குற்றச்சாட்டாக மாறி அவரது வாழ்க்கையின் தொழில்முறை பின்னடைவு ஏற்பட்டது என்பதையும் அதிலிருந்து அவர் எவ்வாறு வெளிவந்தார் என்பதையும் விளக்குகிறது. நடிகரும் இயக்குனருமான ஆர். மாதவனின் சிறப்பான நடிப்பைக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை இது என்பது மிகையல்ல.
hop on for a space adventure 🚀#RocketryOnPrime, July 26 pic.twitter.com/W3JDZEz2eD
— prime video IN (@PrimeVideoIN) July 20, 2022