சந்திரபாபு பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பில் புதுமுகம் சாரத், நடிகராகவும், இயக்குனராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் திரையுலகில் கால் பதிக்கும் திரைப்படம் “தெற்கத்தி வீரன்”. முழுமையான பொழுதுபோக்கு, ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகர் மதுசூதன் ராவ் பேசியது…
மைக் பார்த்தால் இப்போது எனக்கு பயம் தான் எனக்கு நடிக்க மட்டுமே தெரியும். இதுக்கு முன்னால் புகழ் பெற்ற டி ராஜேந்தர் சார் போல் இப்படத்தின் ஹீரோ ஒரே ஆளாக வேலை பார்த்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது வாழ்த்துக்கள் நன்றி.
நடிகர் பரணி பேசியது…
ராஜன் சார் யூடுயூப் வீடியோக்களுக்கு நான் ரசிகன். மூத்த ஆளுமைகள் இங்கு வாழ்த்த வந்திருப்பது பெருமையாக உள்ளது. சாரத் அண்ணாவுடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். படம் மிகப்பெரிய வெற்றியடையும் வாழ்த்துக்கள்.
K ராஜன் கூறியதாவது..,
பிணத்தை வைத்து யூடுயபர்கள் பிழைக்கிறார்கள். தமிழ் திரையில் சிறந்து விளங்கிய நடிகை மீனா கணவர் இறப்பில் பணம் சம்பாதிக்கிறார்கள் அதை பார்க்க மனது கஷ்டமாக இருக்கிறது. இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தப்படத்திற்கு தமிழில் படத்திற்கு தலைப்பு வைத்திருப்பது மிகச்சிறப்பான விஷயம். இந்த திரைப்படம் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. எடிட்டர் உடைய பணி பாராட்டும்படி உள்ளது. இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா உடைய இசை இந்த படத்திற்கு சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு என அனைத்தையும் சாரத் செய்துள்ளார். அவருடைய திறமையை நான் பாராட்டுகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா கூறியதாவது..,
படத்தின் அனைத்து பாடல்களையும், இயக்குனர் சாரத் தான் எழுதியுள்ளார், ஒரு புது கவிஞர் போல் அவரது எழுத்து இருந்தது. இயக்குநருக்கு யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என தெரியும். படத்தின் நாயகனாகவும், தயாரிப்பாளரவும், நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இசை சிறப்பாக வந்துள்ளது. படத்தில் மொத்தம் ஐந்து பாட்டுகள் இருக்கிறது. படம் சிறப்பாக வந்துள்ளது. நீங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர், நடிகர் சாரத் கூறியதாவது..,
ஒரு உண்மை சம்பவத்தை தழுவியது தான் இந்த படம். அதை கமர்சியல் சினிமாவாக உங்களுக்கு தர விரும்பினேன். ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட வேண்டும் என்பது எனது 17 வருட கனவு. படத்தின் பின்னணி இசைக்கு மட்டும் 60 நாட்கள் எடுத்துகொண்டோம். படத்தின் எபெக்ட்ஸ் பணிகளில் பெரிய உழைப்பை கொடுத்துள்ளோம். இந்த திரைப்படம் எடுத்து வெளியே கொண்டு வர நிறைய கஷ்டப்பட்டிருக்கிறோம். ஒரு தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் உடைய வலி என்ன என்பதை இந்த படம் மூலமாக தெரிந்து கொண்டேன். படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நான் நன்றி கூறி கொள்ள விரும்புகிறேன். நடிகர்கள் முழு அர்பணிப்பை கொடுத்துள்ளனர். அனைவருக்கும் நன்றி.