அன்யா’ஸ் டுடோரியல் திரைவிமர்சனம் – (2.5/5)

ரெஜினா கசென்றா, நிவேதிதா சதீஷ் நடிப்பில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியான இனைய தொடர் தான் “அன்யா’ஸ் டுடோரியல்”. 7 எபிசோடுகள் கொண்ட இத்தொடரை பல்லவி கங்கி ரெட்டி அவர்கள் இயக்கியுள்ளார்.

கதைப்படி…

தன் சிறுவயது முதலே அக்கா மீதி வெறுப்புடனும், பயத்துடனும் இருக்கும் லாவண்யா (நிவேதிதா), வீட்டில் சண்டைபோட்டுவிட்டு யாரும் இல்லாத அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தனியாக குடிபோகுறார். அது லாஃடவுன் சமயம் என்பதால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்யாஸ் டுடோரியல் என்ற பெயரில் லைவ் வீடியோவில் அழகு சாதனங்களை பற்றி கற்றுத்தருகிறாள் லாவண்யா. பின்பு வியூஸ் அதிகம் வருவதற்காக பேய் இருக்கும் படியான சில மாயைகளை செய்கிறார் லாவண்யா.

பின்பு, நிஜமாகவே அந்த வீட்டில் சில அமானுஷ்ய செயல்கள் நிகழ்கின்றன. இது அனைத்தும் அறிந்த ரெஜினா தனது தங்கையை வீட்டிற்கு அழைக்கிறாள். அதை மறுக்கும் லாவண்யா என்ன ஆனால்? அன்யா என்பது யார்? நிஜமாகவே அது பேய் தானா? இல்லை சிறுவயதில் அவர்களுக்கேற்ப்பட்ட கசப்பான அனுபவத்தின் வெளிப்பாடா? அன்யா டுட்டோரியலை பார்த்த சிறுவர்கள் என்ன ஆனார்கள்? என்பது மீதிக்கதை…

நான்கு கதாபாத்திரத்திற்குள்ளாகவே கதையை நகரச்செய்திருக்கிறார் இயக்குனர் பல்லவி. இணையத்தொடர் என்பதால் கதை சற்று மெதுவாக தான் சூடு பிடிக்கும். தேர்ந்தெடுத்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என அனைவரையும் சரியாகவே தேர்வு செய்துள்ளார் இயக்குனர் பல்லவி.

என்னதான் சரியான ஆட்கள் இருந்தாலும் பல்லவி அவர்கள் தேர்ந்தெடுத்த கதை சொதப்பல் தான். வலுவான கதையோ, திரைக்கதையோ இல்லை என்றே சொல்லவேண்டும்.

தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ரெஜினா, மற்ற படங்களை விட இத்தொடரில் வலுவான கதாபாத்திரத்தை சுலபமாக கையாண்டுள்ளார்.

நிவேதிதா சதீஷ் சமீபத்தில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றிருந்தார். அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள “அன்யா’ஸ் டுடோரியல்” தொடரின் மூலம் அவரின் முழு திறமையையும் வெளிப்படுத்திவிட்டார்.

ஃப்ளாஷ்பேக் கதையில் வரும் சிறுவர்கள் சிறப்பான நடிப்பை தந்துள்ளனர்.

இசையில் அர்ரோல் கொரெலி, ஒளிப்பதிவில் விஜய் கே சக்கரவர்த்தி, ரவிதேஜா கிரிஜலாவின் படத்தொகுப்பு என அனைவருமே தங்களின் வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

அன்யா’ஸ் டுடோரியல் – பயம் இல்லாத பேய்த் தொடர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *