இளஞ்சூரியன் வாசிப்பாளர்கள் அனைவர்க்கும் வணக்கம். என்னடா இது இந்த வலயத்தளத்துல இதனை விமர்சனங்களை படித்திருக்கோம். வணக்கம்னு புதுசா சொல்ராங்களே அப்படினு யோசிக்க வேண்டாம்.
இதற்க்கு முன் நீங்கள் வாசித்த திரை விமர்சனங்களை போன்று இது இராது. சிறிது மாறுபட்டு தான் இருக்கும். என் என்றால் நீங்கள் படிக்க போகும் விமர்சனம் கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் விமர்சனம்.
இப்படத்தின் கதை அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. முதல் பாகத்தில் கருடனை கொன்று கே.ஜி.எஃப்(ஐ) கைப்பற்றிய ராக்கிக்கு பிற வில்லின்கள் மூலம் வரும் இன்னல்களை சமாளித்து கே.ஜி.எஃப் மற்றும் இந்த உலகை ஆழ்வதே இந்த கதை.
அடடா என்னங்க இரண்டரை மணி நேரக்கதை வெறும் இரண்டு வரி தானா? அப்படினு உங்களுக்குள்ள ஒரு கேள்வி எழுந்தா. உங்களுக்கான பதில் படத்தின் திரைக்கதை தான். படத்தில் வரும் திருப்புமுனை முதல் படத்தின் முடிவு வரை நான் பதிவு செய்ய விரும்பவில்லை. அவ்வாறு நான் செய்தால் என் வாசிப்பாளர்களின் எதிர்பார்ப்பை நானே வீணடித்தது போன்று இருக்கும்.
முதல் பாகத்தை போலவே மாஸ், ரொமான்ஸ், செண்டிமெண்ட் கதையை சொல்லும் விதம் மற்றும் சுவாரசியம் ஒன்றுமே குறையாமல் இருக்கும். ஆனால் ஆக்ஷன் சீன்ஸ் மட்டும் முதல் பாகத்தை விட 4 மடங்கு அதிகமாக தான் இருக்கும்.
யஷ்-சஞ்ஜய் தத்ன் மாஸ், ஸ்ரீநிதி ஷெட்டி – ரவீனா டாண்டனின் கிளாஸ், பிரகாஷ் ராஜின் வாய்ஸ், மற்ற நடிகர்களை டைரக்டர் செய்த சாய்ஸ் அனைதிற்கும் கிடைத்தது ஆடியன்ஸின் கிளாப்ஸ்.
ரவி பாசூரின் இசையும், பிரஷாந்த் நீலின் இயக்கமும் மிரட்டல் தான்.
என்னதான் பிரமாண்ட படம்னு பல நூறு கோடி ரூபாயை செலவு செய்து கதையில் வலுவில்லாமல் சமீபத்தில் வெளியான படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தாலும். இந்த படத்தின் பிரமாண்டம் வேறு ரகம்.
தமிழ் சினிமாவில் உட்ச நட்சத்திரங்கள் வாங்கும் சம்பளம் (100 கோடி ரூபாய்) தான் இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டாம். ஆனால் படத்தின் கதையையும் படமாக்கிய விதத்தையும் பார்த்தால் நம்பத்தகாத வகையறா.
சரிங்க புகழ்ந்தது போதும் என்ன தான்ங்க சொல்ல வரீங்க? அதாவது இந்த படத்தில் குறை என்று சொல்ல ஒன்றும் இல்லை. நீங்கள் கொடுக்கும் ஒரு ஒரு ரூபாயும் மனதிற்கு நிறை தான். திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பை யாரும் மிஸ் பண்ணாதீங்க. நான் கதைய சொல்லல முடிவ சொல்லல. நீங்க படத்த பாத்து நான் பெற்ற அனுபவத்தை நீங்களும் பெற வேண்டும் (வீ காண்ட் அவாய்ட்).
கன்னட சினிமாவை இந்தியா முழுக்க திரும்பி பார்க்க வைத்த படம் கே.ஜி.எஃப் -1, தற்போது இந்திய சினிமாவை உலகம் முழுக்க திரும்பி பார்க்கவைக்க போகும் படம் கே.ஜி.எஃப் – 2.
இப்படி பட்ட ஒரு தரமான படத்தை உருவாக்கியதற்கு பட குழுவினர் அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
எனது விமர்சனம் இன்னும் முடியவில்லை, இந்த விமர்சனத்திற்கு இன்னொரு அத்தியாயமும் உண்டு.
கே.ஜி.எஃப் 2 – மாஸ் + கிளாஸ் + சாய்ஸ் = கிளாப்ஸ்