ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.இதுவரை 5 சீசன்கள் முடிந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது பிக் பாஸ் நிகழ்ச்சி.
இதை தொடர்ந்து 5சீசன்களின் சில போட்டியாளர்களை தேர்வு செய்து பிக் பாஸ் அல்டிமேட் என 24*7 லைவ் நிகழ்ச்சியின் சீசன்-1 கடந்த மாதம் துவங்கியது. பிக் பாஸை கடந்த 5 சீசன்களாக நடிகர் கமலஹாசன் தொகுத்து வந்தார்.
இந்நிலையில் தனக்கு பட வேலைகள் இருப்பதால் தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டில் மூன்று எபிசோடுகள் மட்டுமே தொகுத்து வழங்கினார்.
இதற்கு முன்னதாக நடிகர் கமல் ஹாசன் கொரோனாவால் பாதிக்கபட்ட பொது நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக இருக்கலாம் என பலர் நினைத்த நிலையில், தற்போது டாக்டர்.சிலம்பரசன் TR இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
டாக்டர்.சிலம்பரசன் TR தொகுத்து வழங்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சிகள் நேற்று ஷூட் செய்யப்பட்டதாகவும். அந்தக் ப்ரோமோ காட்சிகள் இன்றைக்கு வெளியாகலாம் எனவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.