வரும் 24ம் தேதி அஜித் குமார் நடித்த ‘வலிமை’ படம் வெளியாகவுள்ள நிலையில், அஜித் ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று முதல் நாள் காட்சிகள் அனைத்திற்கும் டிக்கெட்டுகள் டிமாண்ட் ஆகிய வண்ணமுள்ளது.
இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். 4 மொழிகளில் பல மாநிலங்களில் வெளியாகும் இந்த படத்தின் தமிழ்நாடு ரிலீஸை கோபுரம் சினிமாஸ் வாங்கியுள்ளது. ஒவ்வொரு ஏரியாவிற்கும் தனித்தனி விநியோகிஸ்தர்கள் இருக்கும் நிலையில், சென்னை மாவட்டத்தின் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது.
பல தியேட்டர்கள் 4 மணி காட்சியை முதல் காட்சியாக திரையிடுகின்றனர். அதே போல், சென்னை கோயம்பேட்டிலுள்ள ரோகினி திரையரங்கம் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது.
முதலாவதாக 4 மணி காட்சிகளுக்கு முன்பதிவு துவங்கி டிக்கெட்டுகளை காம்போ டிக்கெட் என ரூ.360 என விலை நிர்ணயம் செய்து வழங்கியது. ரசிகர்களும் டிக்கெட் வாங்கிய உற்சாகத்தோடு #thaladharisanam என ட்விட்டரில் பகிர்ந்தும் வந்தனர்.
ஆனால், அவர்களின் ஒட்டுமொத்த ஆசையை சுக்குநூறாக உடைக்கும் வகையில் ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸ் உரிமையாளர் நிகிலேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை படத்தின் விநியோகிஸ்தர் வழக்கத்தை விட அதிக ரூபாய்க்கு படத்தை தன்னிடம் வாங்க வலியுறுத்துகின்றனர். அதனால், ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க இந்த படத்தின் 4 மணி காட்சி திரையிடப்படாது என வருத்தம் தெரிவித்தார்.
மற்றும் காம்போ டிக்கெட்டுகளுக்கு காம்போக்கான ரூ.164/- மட்டும் திருப்பி வழங்கபடும் எனவும் பகிர்ந்திருந்தார்.
இது ஒருபுறம் இருக்க, 4 மணி காட்சியின் டிக்கெட்டுகளை ரூ.1500/- க்கு நீங்கள் விற்கும் உண்மை தெரிந்ததால் தான் உங்களுக்கு படத்திற்கான முதற்காட்சி வழங்கப்படவில்லை என பல ரசிகர்கள் எதிர்ப்பும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
சரி இதற்கான காரணம் தான் என்ன? என்று பார்த்தல், டிக்கெட் விலையை உயர்த்தி விற்றதால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரோகினி திரையரங்கிற்கு முதல் காட்சியை விநியோகம் செய்ய மறுத்திருக்கலாம் என ஒருபுறமும், சமூக ஆர்வலர் ஒருவர் ரோகினி திரையரங்கின் மீது விலையுயர்வு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் காரணமாக இருக்கலாம் என மற்றொருபுறமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.