சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன்

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்,
கார்த்தி – இயக்குனர் முத்தையா மீண்டும் இணையும் “விருமன்” பூஜை நடைபெற்றது.

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். சூரியா அறிமுகப்படுத்த, கார்த்தியின் ஜோடியாகும் இந்த செய்தி திரையுலகிலும், மக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“விருமன்” என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தின் பூஜை இன்று (செப்டம்பர் 6) நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகர் சிவகுமார், திருமதி லட்சுமி சிவகுமார், சூர்யா, கார்த்தி, புதுமுகம் அதிதி ஷங்கர், இயக்குநர் ஷங்கர், திருமதி.ஈஸ்வரி ஷங்கர், பிருந்தா சிவகுமார், தயாரிப்பாளர் எஸ்.தாணு, K.E.ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் பாலா, இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் சிறுத்தை சிவா, இயக்குனர் சுதா கோங்க்ரா, இயக்குனர் பாண்டிராஜ், இயக்குநர் முத்தையா, இயக்குனர் ஜெகன், இயக்குனர் த.செ.ஞானவேல், இசை அமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், DOP எஸ்.கே.செல்வகுமார், மாஸ்டர் அனல் அரசு, ஆர்ட் டைரக்டர் ஜாக்கி, போஸ்டர் நந்தகுமார், சக்தி பிலிம்ஸ் சக்திவேல் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அதே போல், தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அதிதி ஷங்கர். முன்னணி இயக்குநரின் மகள் என்பதை தாண்டி தன்னை இப்படத்திற்காக முழு அளவில் தயார் செய்து கொண்டுள்ளார். நடிப்புக்காக சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இப்படத்தில் மேலும், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள். கொம்பன் படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார். கலை: ஜாக்கி , எடிட்டிங்: வெங்கட்

தேனியில் செப்டம்பர் 18 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *