உருமாற்றிக்கொள்ளும் கொரோனா வைரஸ்.. பயனற்றதாக மாறும் தடுப்பு மருந்துகள்.. விஞ்ஞானிகள் கவலை.
லண்டன்: கொரோன வைரஸ் உருமாற்றம் அடைவதாக கூறினார்கள். இந்நிலையில், அந்த வைரஸில் உள்ள சில விகாரங்கள் மனிதர்களுக்கு ஏற்றதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளில் இருந்து தப்பிக்கும் வகையில் கொரோனாவைரஸ் தன்னை மனித உடலில் உருமாற்றிக்கொள்கிறதாம். இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் 40 லட்சம் பேரை பாதித்துள்ளது. சுமார் 2லட்சத்துக்கும் அதிகமான மக்களை கொன்றுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன.
மற்ற வைரஸ் தொற்றுகளை போல் அல்லாமல் கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக பரவுகிறது. அறிகுறிகள் தெரியும் முன்பே பலருக்கும் பரவிவிடுகிறது. இதனால் கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த வைரஸ் அதிலிருந்து தப்பிக்கும் வகையில் தன்னை உருமாற்றிக் கொள்ளத் தொடங்கியதுதானாம்.
இருவிஷயங்களை ஏற்றுக் கொள்கிறேன்.
வாய் மூக்கு மூலம் பரவல்
வாய், மூக்கு மற்றும் கண்களின் வழியாக மனிதனுக்கு கொரோனா வைரஸ் பரவுகிறது. அந்த வைரஸில் உள்ள ஸ்பைக் என்று அழைக்கப்படும் முள் வடிவிலான புரதம் மனித செல்களோடு ஒட்டிக் கொள்கிறது. இப்படி ஒட்டிக்கொண்டவுடன் வைரஸ் தனது மரபணுவை மனித செல்களுக்குள் புகுத்துகிறதாம்.. மனித செல்களுக்குள் நுழையும், கொரோனாவின் மரபணு, அந்த செல்லை வைரசின் இனப்பெருக்க தளமாக மாற்றிவிடுகிறது. இதனால் மனிதனின் உடலில் பாதிக்கப்பட்ட செல், ஒரு வைரசாகவே மாறி, பல்கிப்பெருகிறது.
ஸ்பைக் புரதம்
பொதுவாக வைரசுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பு மருந்து, வைரசின் ஸ்பைக் புரதம் குறித்த தகவலை உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அளிக்கிறது. அதனால், தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் உடலுக்குள் வைரஸ் நுழையும் போது ஸ்பைக் புரதத்தை அடையாளம் கண்டு, மனித செல்கள் அதனுடன் இணைவதை தவிர்த்து விடுகிறது. ஆனால், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதம் தன்னையே உருமாற்றிக் கொள்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்னர்.
லண்டன் ஆராய்ச்சியாளர்கள்
லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் உலகம் முழுவதும், 62 நாடுகளில் 5349 கொரோனா மாதிரிகளை சோதனை செய்தனர். இந்த ஆராய்ச்சியில் வைரஸின் மரபணுவில் இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும், இதன் காரணமாக ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளதையும் கண்டுபிடித்துள்ளார்கள்.
தெளிவாக தெரியவில்லை
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை ஆராய்ச்சியாளர்கள் இரண்டு தொகுப்பாக பிரித்திருக்கிறார்கள். ஒரு தொகுப்பில் உள்ள 788 வகையான வைரசிலும் மற்றொரு தொகுப்பில் 32 வைரசிலும் உருமாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த மாற்றங்கள் வெவ்வேறு நாடுகளில் தானாகவே நடந்திருந்தாலும் வைரஸின் உருமாற்றங்கள் எவ்வாறு பாதிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த உருமாற்றங்கள் வைரஸ் எளிதில் மனித உடலில் பரவ உதவும் என்று என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
விஞ்ஞானிகள் அதிர்ச்சி
கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தின் தற்போதைய வடிவத்தின் அடிப்படையில்தான் உலகம் முழுவதும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந் நிலையில், ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக் கொண்டால் தடுப்பு மருந்துகளை பயனற்றதாக மாற்றி விடும் என்று விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.
தடுப்பு மருந்துகள்
உருமாற்றம் நடைபெறாத வைரஸ்களுக்கு எதிராக மட்டுமே தடுப்பு மருந்துகள் வேலை செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் எனவே தடுப்பு மருந்துகள் தயாரிப்பவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனோ வைரசில் ஏற்படும் மரபணு மாற்றங்களையும் கருத்தில் கொண்டு மருந்துகளை தயாரிக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.