மூன்றாண்டுகள் நிறைவு…
வாழ்த்துகள் கமிஷனர் சார்….
சென்னையின் காவல் பணி சவால் நிறைந்த ஒன்று, அதை மிக நிறைவாக பலரும் போற்றும் வண்ணம் சாதித்துக் காட்டி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் கமிஷனர் ஏ.கே.வி சார்…
பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்பதை நேரில் இவர்மூலம் சென்னை கண்டது….
காட்சிக்கு எளியவராக அனைவரும் அணுகும் அலுவலராக அனைவரிடமும் மனிதாபிமானம் காட்டியவர்…
மூன்றாண்டுகள் எந்த ஊடகமும், எவரும் முகம் சுழிக்காவண்ணம் சென்னை காவல்துறையை வழிநடத்திய பெருமைக்குரியவர்…
சென்னையின் மூன்றாம் கண்ணாம் கண்காணிப்பு கேமராவை திறந்து குற்றப்புலனாய்வில் புதிய அத்தியாயம் படைத்தவர். செயின் பறிப்பும், செல்போன் பறிப்பும், குற்றச்சம்பவங்களும் எளிதில் கட்டுப்படுத்தப்பட்டன.
காவலன் செயலி மற்றொரு மைல்கல். கடைகோடி காவலர்கள் அதிக அளவில் தங்கள் பணிக்காக அங்கிகாரம் பெற்றது இவர் பணிகாலத்தில் தான்.
போலீஸுக்கு உதவிய பொதுமக்களுக்கும் அதே பாராட்டு கிடைத்தது. சீன அதிபரின் வருகை இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு பாதுகாப்பு ஏற்பாடு இவரது நிர்வாகத்திறனுக்கு ஒரு சோற்றுப் பருக்கை…
காவல் பணி சமுதாயப்பணி, காவல்துறை உங்கள் நண்பன் என்பதை நடைமுறையில் நிரூபித்தவர்…
மக்கள் ஆணையராக மூன்றாண்டுகள் நிறைவு செய்துள்ள இவரது பாணி (Work Style) பல ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது.