பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீராம் அவர்களின் மாபெரும் இசைக் கச்சேரி ஜூலை மாதம் 20 ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

இசை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இசை ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பாக ஜூன் 22 ஆம் தேதி நடைபெற இருந்த பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் அவர்களின் இசை நிகழ்ச்சி வானிலை காரணமாக ஜூலை மாதம் 20ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வானிலை மாற்றத்தால் கடந்த சில தினங்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால் இந்த மாற்றம் தவிர்க்க முடியாதகியுள்ளது.

இசை கச்சேரிக்கு வரும் பார்வையாளர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம், உள்கட்ட அமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியாதது போன்ற காரணங்களாலும் இசைக் கச்சேரி நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ரசிகர்களிடையே குழப்பத்தையும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த கூடும் என்பதை உணர்வதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். Toyow Nee Singham Dhan Sid Sriram Live In Concert நடைபெற உள்ள புதிய தேதி ஜூலை மாதம் 20 ம் தேதி என்றும், ஃபீவர் மற்றும் சித்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் (@feverfmofficial மற்றும் @sidsriram) பார்க்க மறக்காதீர்கள். அங்கு சித் உங்களுக்காக ஒரு சிறப்பு செய்தியை விட்டுச் சென்றார். இசைக் கச்சேரி நடைபெறும் இடம் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை – 600003, இதற்கான டிக்கெட்டுகளை வைத்திருக்கும் ரசிகர்களுக்கு வாட்ஸ் அப்/மின்னஞ்சல் மூலம் நேரடியாக கச்சேரி நடைபெற உள்ள இடம் நேரம் பற்றிய தகவல்கள் அனுப்பப்படும். மேலும் புதிதாக டிக்கெட் பெற விரும்புவர்கள் ஃபீவரின் அதிகாரப்பூர்வ Instagram ஐ பின் தொடரலாம்.

முக்கிய குறிப்புகள்:

* ஜூன் 22 ஆம் தேதி அன்று சென்னை ஒய் எம் சி ஏ திடலில் நடத்த திட்டமிடப்பட்ட Sid ஸ்ரீராம் லைவ் கன்சர்ட், மோசமான வானிலை காரணமாக ஜூலை மாதம் 20ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது

* பாதுகாப்பு எங்களின் முதன்மையான அம்சமாகும் என்பதால் தற்போதைய வானிலை சூழல் காரணமாக இந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது.

* தற்போது ரசிகர்கள் பெற்றுள்ள டிக்கெட் மீண்டும் திட்டமிடப்பட்ட நிகழ்வுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போது அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பை புரிந்து தொடர்ந்து அளிக்கும் ஆதரவை பாராட்டுகிறோம். தற்போது பெற்றுள்ள டிக்கெட் மறு திட்டமிடப்பட்ட தேதிக்கு செல்லுபடி ஆகும் என்பதை ஒவ்வொரு ரசிகர்களும் நினைவில் கொள்ளவும். அடுத்த மாதம் ஜூலை 20 ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ள மிகப்பெரிய சித் ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சிக்கு தயாராகலாம்… அங்கே பார்க்கலாம்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *