கருப்பு பல்சர் – திரை விமர்சனம் 3.5/5

வாட்டர் கம்பெனியில் வேலை பார்க்கும் தினேஷ், மேட்ரிமோனி மூலம் ரேஷ்மாவை சந்தித்து காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்கிறார். உரையாடலின்போது தன்னிடம் கருப்பு பல்சர் பைக் இருப்பதாக கூற, அதில் அழைத்துச் செல்லுமாறு ரேஷ்மா விருப்பம் தெரிவிக்கிறார். வேறு வழியில்லாமல் தினேஷ் ஒரு பழைய கருப்பு பல்சரை வாங்குகிறார். அந்த பைக் வந்த பிறகு அவரது வாழ்க்கையில் தொடர் அசாதாரண சம்பவங்கள் நடக்க, அந்த பைக்குள் காளைமாடு ஒன்றின் ஆவி புகுந்திருப்பது தெரிய வருகிறது. அந்த ஆவியின் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிக் கதை.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை நேர்த்தியாகச் செய்யக்கூடிய தினேஷ், இப்படத்திலும் முழுமையாக கதாபாத்திரமாக மாறி நடித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காட்சிகள் தத்ரூபமாக இருந்து படத்திற்கு உயிர் கொடுக்கிறது. ஹீரோயினாக ரேஷ்மா அழகாகவும் இயல்பாகவும் நடித்துள்ளார். பிராங்க் ஸ்டார் ராகுல் தனது காமெடியால் சிரிக்க வைக்கிறார்.

இன்பாவின் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்க, பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக கைகொடுத்துள்ளது. முதல் பாதியை கலகலப்பாகவும், இரண்டாம் பாதியை அமானுஷ்யம் மற்றும் ஆக்‌ஷனுடன் விறுவிறுப்பாகவும் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் முரளி கிரிஷ்.

இயக்கம்: முரளி கிரிஷ். எஸ்

நடிகர்கள்: தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுநிகா, மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி , பிராங்க் ராகுல்

தயாரிப்பு: முரளி கிருஷ்ணன்

இசை: இன்பா

ஒளிப்பதிவு: பாஸ்கர் ஆறுமுகம்

கருப்பு பல்சர் – அதி வேகம்